ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

சூப்பர் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… !

தண்ணீரில் புதினா, இஞ்சி, எலுமிச்சைப் பழ துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி பருகி வந்தால்… உடல் பருமன் குறையும்.

இஞ்சியை சிறு சிறு துண்டு களாக நறுக்கி, 10 நாட்கள் தேனில் ஊறவைக்கவும். தினமும் காலையில் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால்… வாதம், பித்தம், சோர்வு, செரிமானக் கோளாறு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்குப் பருப்பு சாதம் செய்யப் போகிறீர்களா… ப்ளீஸ் வெயிட்! பருப்பை வேக வைக்கும்போது, முருங்கைக் காயின் நடுவில் உள்ள சதைப் பகுதியை சுரண்டி, பருப்போடு சேர்த்து வேகவைத்து, சாதத்துடன் பிசைந்து ஊட்டுங்கள். புரதத்தோடு, இரும்புச்சத்தும் குழந்தைக்குக் கிடைக்கும்; சுவையும் நன்றாக இருக்கும்.

xgfxgf
பாத்திரம் தேய்ப்பதாலும், துணி துவைப்பதாலும்… இல்லத்தரசிகள் பலருக்கு கைகள் வறண்டு, சொரசொரப்பாக இருக்கக்கூடும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை கைககளில் தேய்த்து வந்தால்… சொரசொரப்பு மறைந்து, கைகள் மிருதுவாகும்.

வெந்தயம் அல்லது வெந்தயக்கீரையை விழுதாக அரைத்து, முகப்பருவின் மீது தடவி வந்தால், பருவினால் ஏற்படும் வலி நீங்குவதோடு, பருவும் மறையும்.

சாதாரண தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டாதா..? பிரெட் துண்டுகளை இரண்டிரண்டு முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். இவற்றை தோசை மாவில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுங்கள். சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறுங்கள்.

விசேஷ நாட்களில் இழைக் கோலம் போட அரிசியை ஊற வைக்கும்போது, ஒரு கைப்பிடி அளவுக்கு உளுந்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து கோலம் போட்டால்… பெயின்ட் அடித்தது போல ஒரு வாரம் வரை அழியாமல் ‘பளிச்’ என்று இருக்கும்.

Related posts

பெண்கள் தொப்பை குறைப்பது எப்படி?

nathan

தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள்

nathan

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

sangika

சர்வாங்காசனம்

nathan

நல்லெண்ணெய்

nathan

“கர்ப்பகாலத்தால் சில தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டாலே, சிசேரியனைத் தவிர்த்துவிடலாம்.

nathan

பெண்கள் மூக்கு/காது குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..?

nathan

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

sangika