30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
மருத்துவ குறிப்பு

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுப்பது நல்லதா?

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுப்பது நல்லதா? கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.

அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல் தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற பிரச்சனைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்சனை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

Related posts

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

nathan

பெண்களை புரிந்துகொள்ளுங்கள்… பெண்களே… புரிந்துகொள்ளுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ரோஜாவின் சில இதழ்களை சாப்பிட்டா உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்!!

nathan

மொபைல் போன் அதிகம் பார்க்கும் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த உணவுகளை தினமும் கொடுங்கள்…

nathan

மனம்: நலம்.. நலமறிய ஆவல்…

nathan

முதுமையில் கா்ப்பம் தாித்தல் மற்றும் செயற்கை கருவூட்டல் பற்றிய விளக்கம்!

nathan

சிறுநீரில் இரத்தம் செல்வதற்கான காரணங்கள் என்ன?

nathan

கர்ப்பிணிகள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள்

nathan