29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

ஆயுளை காக்கும் பற்கள்

images (7)இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரிடமும் அழகுக்கான ஏக்கம் இருக்கிறது. அழகு இருந்தால்தான் மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அதாவது தன்னம்பிக்கை தரும் அளவுக்காவது முகத்தின் அமைப்பு அழகாக இருக்கவேண்டும். எந்த வகையிலும் காண்பவரை உறுத்தும் வண்ணம் முக அமைப்பு இருந்துவிடக்கூடாது.

நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போதுகூட தோற்றத்திற்கு அங்கே மதிப்பிருக்கிறது. தகுதிகள், திறமைகளுக்கு இணையாக தோற்றமும் இருக்கிறதா என்று எடை போடுகிறார்கள். அதனால்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது. யாருமே அவலட்சணமான முகத்திற்கு ஆசைப்படுவதில்லை.

ஆனால் பிறவியிலேயே தாடை, பற்கள் மற்றும் உதடுக் குறைபாடு ஏற்பட்டிருந்தால் முக அமைப்பு திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் இயற்கை கொடுத்த தண்டனை என்று விரக்தி அடையாமல், முகத்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது.

• முக அழகு மேம்பாடு:

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பிறவியிலேயே தாடை மற்றும் உதடு பிளவு குறைபாடுடன் கிட்டத்தட்ட 800-க்கு ஒரு குழந்தை பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறவியிலேயே சிலருக்கு குறைவான அல்லது கூடுதல் வளர்ச்சியுடன் தாடை இருக்கும்.

பற்கள் நேர் வரிசையாக இல்லாமல் ஏறுக்குமாறாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு முகம் ஒருபக்கம் கோணலாக அமைந்திருக்கும். இதுபோன்ற குறைபாடுகளுக்குக் காரணம், முக எலும்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாததுதான். இதுதவிர விபத்துக்களால் தாடை, பற்கள் சேதமடைந்து முகத்தின் அழகு பாதிக்கப்படலாம்.

சிலருக்கு முக எலும்புகள் உடைந்து சேதமடையலாம். கதிர்வீச்சு போன்ற காரணிகளாலும் முகத்தில் குறைபாடு தோன்றலாம். சிலர் தங்கள் பழக்க வழக்கத்தாலும் குறைபாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது ஒருசில குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் செல்லும் வயதைத் தாண்டிய காலகட்டத்திலும் கை சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.

இதனால் முகத்தின் அமைப்பு சற்று மாறிவிடுகிறது. இதுதவிர வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இதுபோன்ற பழக்கங்களாலும் இன்னும் சில கணிக்க முடியாத காரணங்களாலும் முக அமைப்பில் விரும்பத் தகாத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

முகத்தில் எலும்புகள், பற்கள், தாடைகளில் தோற்றக் குறைபாடுகள் இருந்தால் அதை சீர்படுத்தி இயல்பான அழகுக்கு கொண்டுவந்துவிட இயலும். உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவு போன்ற குறைபாடுகளையும் சிகிச்சை மூலம் எவ்வித தழும்புகளும் வெளியே தெரியாதவண்ணம் சீராக்கிவிடலாம்.

Related posts

அடேங்கப்பா! டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

அதிர்ச்சி ரிப்போர்ட்.!கருச்சிதைற்கு காற்றுமாசுபாடுதான் காரணம்?

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika

உலர்ந்த திராட்சைகளை கர்ப்ப காலத்தின் போது பெண்கள் சாப்பிடலாமா ?

nathan

உடல்நலத்திற்கு நல்லது பச்சை உணவா… வேகவைத்த உணவா….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’இந்த’ அறிகுறிகள் உள்ள ஆண்களோடு டேட்டிங் பண்ணும்போது கவனமாக இருக்க வேண்டுமாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆபரணங்களை அணிந்து கொள்வதற்கான அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான காரணங்கள்!!

nathan

இயற்கை தரும் ஆரோக்கியம்

nathan