இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம்.
100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது.
இலந்தை பழத்தில் மட்டுமல்லாமல், இலந்தை இலையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும்.
பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.
நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
உடல் வலியை போக்கி உடலை வலுவாக வைத்துக்கொள்ள இலந்தை பழம் சாப்பிடுவது சிறந்த மருந்தாக அமையும்.
பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இலந்தை உள்ளது. இலந்தையின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை குறைக்கவும், உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.
மந்த புத்தி உள்ளவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை புத்துணர்சி பெறும். இதனை பகல் உணவிற்கு பின்னர் சாப்பிட வேண்டும்.
மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.
இலந்தைப் பழ இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.