26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
jumping jacks
உடல் பயிற்சி

உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை!!!

இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். தினசரி உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், வேலை பளு அதிகமாக உள்ளதால், உடலளவிலும் மனதளவிலும் அழுத்தம் ஏற்படுவது உயர்ந்து கொண்டே போகிறது.

சாயங்கால வேளையில், உடல்நலத்தை பேணும் இடத்தில், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்கலாம். நாள் முழுவதும் வேலை பார்த்த அயர்ச்சி மற்றும் சோர்வால், உடல் அமைதி பெற உகந்த நேரமாக இது விளங்குகிறது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது ஆற்றல் திறன் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

இந்த உடல்நல கட்டுரையில், உடற்பயிற்சி செய்யும் போது ஒருவர் பின்பற்ற வேண்டிய தேவையான டிப்ஸ்களை பற்றி நாங்கள் விவரிக்க போகிறோம். சாயங்கால உடற்பயிற்சியாக இருந்தாலும் கூட, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சில டிப்ஸ்களை தான் இப்போது பார்க்க போகிறோம்.

உடற்பயிற்சிக்கு முன் சாயந்தர வேளையில், உடற்பயிற்சி செய்வதற்கு முன், உங்கள் உடலை அதற்கு தயார்படுத்த வேண்டும். உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன், குறைந்தது ஒரு மணி நேரத்திற்காவது எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். சாயந்தர வேளை உடற்பயிற்சியின் முக்கியமான டிப்ஸ் இது. நிறைந்த வயிற்றுடன் உடலை வருத்தும் போது உங்களுக்கு குமட்டல் ஏற்படலாம். சில நேரம் நலக்குறைவும் ஏற்படும். உடற்பயிற்சிக்கு முன் கவனமாக இல்லாவிட்டால், வயிற்று வலி, தசை வலி மற்றும் சோர்வு போன்ற பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நேரம் உங்கள் மனதுக்கும் உடலுக்கும் தோதை ஏற்படுத்தும் நேரத்தை தேர்ந்தெடுத்து உடற்பயிற்சியை செய்யுங்கள். உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் உங்கள் உடலுக்கு சிறிது ஓய்வு தேவை. அளவுக்கு அதிகமான அழுத்தம் சோர்வையும் தளர்ச்சியையும் ஏற்படுத்தும். அதனால் உங்கள் அலுவலக வேலை முடிந்த பின், குறைந்தது ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்னர் உடற்பயிற்சியை தொடங்குவதே பயனை தரும். சாயந்திர வேளையில் செய்யப்படும் உடற்பயிற்சிகளுக்கு இது ஒரு சிறந்த டிப்ஸ். அதே போல் சீரான நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உங்கள் உடலை அதற்கு தயார் படுத்துங்கள்.

சிறிது காப்ஃபைனை சேர்த்திடுங்கள் கூடுதல் ஆற்றல் திறன் மற்றும் புத்துணர்ச்சியை பெற சிறிதளவு காப்ஃபைனை பயன்படுத்தலாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு கப் காபி குடித்தால், தீவிரமான தரை உடற்பயிற்சிகள் மற்றும் இதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உடலுக்கு வலு கிடைக்கும். மேலும் அது உங்கள் தலை பாரத்தை குறைந்து புத்துணர்ச்சியையும் உண்டாக்கும். ஒரு வேலை நீங்கள் காபி குடிக்காதவர் என்றால், கிரீன் டீ குடியுங்கள். உங்கள் வலுவையும் ஆற்றல் திறனையும் அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை கிரீன் டீயும் கூட அளிக்கும். அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன், அல்லது செய்த பிறகு, ஒரு கப் காபி அல்லது டீயை குடியுங்கள்.

தண்ணீர் தண்ணீர் என்பது சாயந்திர உடற்பயிற்சிக்கு அவசியமான ஒரு பொருளாகும். நாள் முழுவதும் வேலை செய்து, சோர்வுடன் திரும்பும் போது, உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிப்போகும். உங்கள் உடல் எப்போதும் நீர்ச்சத்தால் நிறைந்திருக்க வேண்டும். அதனால் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதும் கூட, இடைவேளையின் போது சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள தண்ணீர் உங்கள் ஆற்றல் திறனை மேம்படுத்தும். அதனால் அது உங்கள் சோர்வை முறிக்கும்.

உணவிற்கு பிறகு மாலை நேர உடற்பயிற்சிகளுக்கு பிறகு, இரவு உணவை அதிகளவில் உண்ணக்கூடாது. கொழுப்புச் சத்து நிறைந்துள்ள உணவிற்கு பதில், சாலட் மற்றும் சூப் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். உடற்பயிற்சி செய்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது.

 

Related posts

ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்

nathan

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

nathan

வலிமை தரும் பயிற்சி

nathan

கொழுப்பை குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற்சி

nathan

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்

nathan

பின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி

nathan

உணவுடன் கூடிய உடற்பயிற்சி!

nathan

முன் தொடையை வலிமையாக்கும் உடற்பயிற்சி

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு கஞ்சி

nathan