ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் 30 வயதிற்கு முன்னர் உடலில் இயற்கையான பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் அரிதாகவே காணப்படும்.
ஆனால் 30 வயதினைத் தாண்டிச் செல்லும்போது எதிர்பாராத பல்வேறு கோளாறுகள் தொற்றிக்கொள்ளும்.
எனவே 30 வயதின் பின்னர் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ECG பரிசோதனை
30 வயதினை அண்மித்ததும் இதயம் தொடர்பான பிரச்னைகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இதய நோய்கள் ஏதாவது இருக்கின்றதா அல்லது அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என பரிசோதனை செய்ய வேண்டும்.
மரபணுப் பரிசோதனை
சில வகை நோய்கள் காரணமாக பரம்பரை அலகில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இவை குழந்தைப் பேறு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் அவசியம் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இலிப்பிட்டு பரிசோதனை
உடலில் உள்ள கொலஸ்திரோலில் அளவினை அறிந்துகொள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் இப் பரிசோதனை அவசியமாகும்.
இப் பரிசோதனையின்போது LDL எனப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட இலிப்பிட் ஆனது 130 ஐ விட குறைவாகவும், HDL எனப்படும் உயர் அடர்த்தி கொண்ட இலிப்பிட் 60 ஐ விட அதிகமாகவும் இருக்க வேண்டும்.
ஈரல் தொழிற்பாட்டு பரிசோதனை
உடலிலுள்ள நொதியங்கள், புரதங்கள் மற்றும் ட்ரைகிளிசெரைட் என்பவற்றினை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் தொழிற்பாட்டினை ஈரல் புரிந்துவருகின்றது.
எனவே ஈரலில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கள் மற்றும் நோய்கள் என்பன தொடர்பில் பரிசோதனை செய்தல் அவசியமாகும்.
குறிப்பாக ஈரல் அழற்சி நோய் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
Colonoscopy பரிசோதனை
புற்றுநோய் தொடர்பான பிரச்னைகளை கண்டறிவதற்கும் தீர்வினைப் பெறுவதற்கும் இப் பரிசோதனை அவசியமாகும்.
குறிப்பாக 30 வயதிலுள்ள பெண்கள் இப் பரிசோதனையை அவசியம் செய்தல் வேண்டும்.