29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
white teeth
ஆரோக்கியம் குறிப்புகள்

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமெனில் டூத் பேஸ்ட் மட்டும் தான் உதவும் என்று நினைத்தால் தவறு. ஏனெனில் டூத் பேஸ்ட் கூட பற்களை வெள்ளையாக மாற்றாது. ஆனால் ஒருசில இயற்கைப் பொருட்களை நம் முன்னோர்கள் பற்களை துலக்கப் பயன்படுத்தியதைக் கொண்டு, பற்களை துலக்கினால், பற்கள் வெள்ளையாக பளிச்சென்று இருப்பதோடு, பற்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

நீங்கள் பற்களை வெள்ளையாக மாற்ற எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை தவறாமல் முயற்சித்தால், உடனடி பலனைப் பெறலாம். சரி, இப்போது பற்களை பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அதன் சாற்றினை பற்களில் தடவி, வாயை சிறிது நேரம் திறந்து உலர வைக்க வேண்டும். பின் வாயில் சிறிது பால் ஊற்றி கொப்பளித்து, பின் நீரால் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால், பற்கள் வெண்மையடைவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சையை வெட்டி, அதனை நீரில் சிறிது நேரத் நனைத்து, பின் அந்த நீரைக் கொண்டு பற்களை தேய்க்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், பற்கள் வெண்மையடையும்.

வேப்பிலை வேப்பிலையை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பேஸ்ட் உடன் சேர்த்துப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் வெள்ளையாகும்.

கேரட் ஜூஸ் பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்களில் ஒன்று தான் கேரட். அதற்கு தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவதோடு, கேரட்டை சாறு எடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து, அதனைப் பயன்படுத்தி பற்களை தேய்க்க வேண்டும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு வாரம் 1 முறை பற்களை துலக்க வேண்டும். முக்கியமாக இந்த முறையை அன்றாடம் பயன்படுத்தினால், பற்கள் சென்சிடிவ் ஆகிவிடும். ஆகவே தினமும் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்வதைத் தவிர்க்கவாம் என்று சொல்வார்கள். அதே சமயம் ஆப்பிளை அன்றாடம் ஒன்று சாப்பிட்டு வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வலிமையுடனும், வெள்ளையாகவும் இருக்கும்.1oliveoil

ஆரஞ்சு தோல் ஆரஞ்சு பழத்தின் தோல் கூட முத்துப் போன்ற பற்களைப் பெற உதவும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலைப் பயன்படுத்தி வாரம் இரண்டு முறை பற்களை தேய்க்க வேண்டும். இதனால் விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பால் மற்றும்
தயிர் பால் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, அதனைப் பயன்படுத்தி பற்களை துலக்கி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, அதனைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிற கறைகள் நீங்கும். குறிப்பாக இந்த முறையை செய்த பின்னர் வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.white teeth

பிரியாணி இலை பிரியாணி இலையை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் பொண்டு பற்களை தேய்த்து 10 நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், பற்களை வெண்மையாகும்.

கற்றாழை ஜெல் நிறைய பேருக்கு கற்றாழையும் பற்களை வெள்ளையாக்க உதவும் என்று தெரிய வாய்ப்பில்லை. கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு பற்களை துலக்கினாலும், பற்கள் வெள்ளையாகும்.

மஞ்சள் மஞ்சள் எப்படி பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிற கறைகளைப் போக்கும் என்று பலரும் கேட்கலாம். ஆனால், உண்மையில் மஞ்சள் பற்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு மஞ்சளை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

Related posts

முதுமையில் இளமை சாத்தியமா?

nathan

இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க! முதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

nathan

எல்லா ராசிக்காரரும் தங்கள் கவலைகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியுமா?

nathan

நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால்!….

sangika

வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மும்பையில் அமிதாப் பச்சனின் மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்த ஸ்டேட் பாங்க்…

nathan

எண்ணெய் உணவுகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்….!

nathan

மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்..

nathan