இந்த கெமிக்கல் யுகத்தில் காலையில் எழுந்ததும் நாம் பல் துலக்கும் பேஸ்டில் கெமிக்கல் இருப்பது ஒன்றும் வியக்கக் கூடிய விஷயமில்லை. ஆனால் நம் சமயலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கையான டூத் பேஸ்ட்டை தயார் செய்யலாம்.
இதற்குத் தேவையானப் பொருட்கள்
சமையல் சோடா – 1 டீ ஸ்பூன்
உப்பு – 2 டீ ஸ்பூன்
பெப்பெர்மிண்ட் எசென்ஷியல் ஆயில் – சில துளிகள்
தண்ணீர் – தேவையான அளவு
பேக்கிங் சோடா, உப்பு, மற்றும் பெப்பெர்மிண்ட் எசென்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். கொஞ்ச கொஞ்சமாக அதில் தண்ணீர் சேர்க்கவும். பேஸ்ட் அதன் தேவையான தன்மையை அடையும் வரை தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
அவ்வளவு தான் ஈஸியான இயற்கையான பேஸ்ட் ரெடி!
பேக்கிங் சோடா உங்கள் பற்களை சுத்தம் செய்யும். நச்சுத்தன்மையற்ற இந்த சோடா வாய்க்குள் ஆல்கலைன் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் அமிலத்தன்மையினால் உண்டாகும் அரிப்பைத் தடுக்கலாம்
.
உப்பு கறையை அகற்ற உதவுகிறது, மேலும் பற்கள் பிரகாசிக்க உதவுகிறது.
பெப்பெர்மிண்ட் எசென்ஷியல் ஆயில் சுவாசத்தின் போது புத்துணர்வைக் கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாவையும் இது அழிக்கும். நீங்கள் எசென்ஷியல் ஆயில் பயன்படுத்த முடியாமல் போனால், சில புதினா இலைகளை உபயோகிக்கலாம்.
தண்ணீர் பல் இடுக்கில் தங்கியிருக்கும் உணவு துகள்களை சுத்தம் செய்கிறது.
உங்கள் பற்களை நன்கு சுத்தம் செய்ய பேஸ்ட் போலவே இந்த பற்பசையை பயன்படுத்தலாம்.