29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
63172268c9ea861aa8c9593db23173289a15a7061770441858711910230
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது.

உணவே மருந்து என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உரிய நேரத்தில் சரியான அளவில் உணவை எடுத்துக் கொள்ளாத போது அது விஷமாக மாறி உயிரையே பறித்துவிடும். நமக்கு பிடிக்கிறது என்பதற்காக சத்துள்ள உணவு என்பதற்காக இஷ்டத்திற்கு உண்டு வருகிறோம்.

அப்படி உண்பதால் வரும் விளைவுகளைப் பற்றிக் சிறிதும் யோசிப்பதில்லை. நோய் வாய்ப் பட்டு மருத்துவர்களைச் சந்திக்கும் போது கடைசியாக என்ன உணவு சாப்பிட்டீர்கள், மலம் சரியாகப் போகிறதா என்பதைத் தான் முக்கியமாக கேட்பார்கள். இப்போதாவது புரிகிறதா பாக்டீரியா வைரஸைத் தாண்டி நாம் உண்ணும் உணவும் நம்மை நோய் வாய்ப்படுத்தும் என்று. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்ணவே கூடாத உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

63172268c9ea861aa8c9593db23173289a15a7061770441858711910230

சோடா: வாந்தி வருகிற மாதிரி இருந்தால், செரிக்காததைப் போல் இருந்தால் சோடா வாங்கி குடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் வெறும் வயிற்றில் சோடா குடிக்கும் போது அதிலிலுள்ள கார்பனேட்டட் ஆசிட்கள் வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் இணைந்து குமட்டலையும் அது சார்ந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் உண்ணவேக் கூடாது. தக்காளியிலுள்ள ஆசிட் இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி விடுகிறது. இந்த ஜெல் வயிற்றில் கல்லாகக் கூட மாறும் என அறிஞர்கள் எச்சரிக்கைத் தெரிவிக்கின்றனர்.
காரமான உணவுகள்: காரமான பொருட்களை வெறும் வயிற்றிலும் உடல்நிலை சரியில்லாத போதும் உண்ணக்கூடாது எனச் சொல்லுவார்கள். இதற்கு காரணம் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து எரிச்சலை உண்டாக்கும் என்பதால் தான்.

காபி: காலையில் எழுந்தவுடன் முதலில் காபி டம்ளரைத் தான் தேடுவார்கள். ஆனால் வெறும் வயிற்றில் காபி ஒரு ஆபத்தான பானம். ஒருவேளைக் காப்பிக்கு அடிமையாகி விட்டால் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சிறிது நேர இடைவெளியில் காபியை எடுத்துக் கொள்ளுங்கள்
டீ : காபியைப் போலத்தான் டீயிலும் காப்ஃபைன் என்னும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது அதே போல் டீயில் அமிலமும் அதிகமாக இருப்பதால் உங்கள் வயிற்றை பெருமளவு பாதிக்கும்.

தயிர்:
உடல் சூடாக இருக்கிறது என்று காலையில் எழுந்தவுடன் தயிரை பலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் வெறும் வயிற்றில் உண்பதால் வயிற்றுப் படலத்துடன் இணைந்து உப்புச் சத்தை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் மிகவும் சத்து நிறைந்த உணவு. அதே சமயத்தில் காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது இதை உண்டால் இதிலுள்ள அதீத மக்னீசியம் உடலில் மக்னீசிய- கால்சிய சத்துகளின் சமநிலையை பாதிக்கும். கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம் என்பதால் காலையில் வாழைப்பழத்தை தவிருங்கள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு: சர்க்கரை வள்ளிக் கிழங்கு செரிமான சுரப்பியை அதிகமாக சுரக்க வைக்கிறது. வெறும் வயிற்றில் செரிப்பதற்கு என்ன பொருள் இருக்கப் போகிறது. இதனால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். எனவே சர்க்கரை வள்ளிக் கிழங்கு காலையில் சாப்பிடவேக் கூடாத பொருள்

மாத்திரைகள்: மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எல்லாருக்கும் தெரியும். வெரும் வயிற்றில் மாத்திரைகளை உண்ணும் போது வயிற்றில் அரிப்பை ஏற்படுத்துவதோடு உடலின் அமில சமநிலையைக் கெடுக்கிறது.

Newstm.in

Related posts

பெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்

nathan

இந்த 6 ராசி பெண்கள் மோசமான மனைவிகளாக இருப்பாங்களாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

nathan

சமையலறைக்கு சில எளிய குறிப்புகள்.

nathan

உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்

nathan

உடல் எடையை குறைக்க அன்றாடம் இப்படி தான் தூங்க வேண்டுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் உடையில்லாமல் உறங்குவது உடலுக்கு நன்மையா?..!!

nathan

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

சமையலில் செய்யக்கூடாதவை !

nathan