26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கிய உணவு

அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையை போக்க இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது?

[ad_1]

அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையை போக்க இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது?

உங்களுக்கு அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்படுகிறதா? வயிற்றில் வாயுத் தொந்தரவாலும் அவதிப்படுகிறீர்களா? நம் வீட்டிலேயே கிடைக்கும் இஞ்சி மட்டுமே இதற்கு சரியான தீர்வாகும். அஜீரணக் கோளாறைச் சரிசெய்வதோடு மட்டுமல்லாமல், உணவில் உள்ள புரோட்டீன்களையும் இஞ்சி சரியான விகிதத்தில் சமப்படுத்துகிறது. மேலும் இது நம் வயிற்றில் மியூக்கஸ் சுரப்பை உறுதிப்படுத்தி, அல்சர் நோயிலிருந்து நம்மைக் காக்கிறது.

இவை தவிர, வயிற்றில் ஏற்படும் வாயுத் தொந்தரவைப் போக்குவதற்கு இஞ்சியில் உள்ள கார்மினேட்டிவ் தன்மை உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி-எமெட்டிக் பண்புகள், எரிச்சல், வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளன. இவை எல்லாவற்றையும் விட, பலவிதமான அலர்ஜிகளைப் போக்குவதிலும் இஞ்சி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. அஜீரணம் மற்றும் வாயுக் கோளாறா? இஞ்சி தான் எப்பவுமே பெஸ்ட்…

 இஞ்சியை அஜீரணக் கோளாறுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? 

இதோ சில டிப்ஸ்:

இஞ்சி ஜூஸ் இஞ்சியை நன்றாகக் கழுவி, அதன் தோலை உரித்த பின்னர், இஞ்சி ஜூஸ் தயாரித்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு நாளுக்கு ஒருமுறை குடித்து வந்தாலே போதும். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பல்லாலேயே கடித்து… இஞ்சியைத் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். அதில் ஒரு துண்டை கடவாய்ப் பல்லால் கடித்து, வரும் ஜூஸை அப்படியே விழுங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் தள்ளவும். இப்படியே ஒவ்வொரு துண்டாகக் கடித்து சாறு குடித்தால் விரைவில் அஜீரணத்துக்கு விடுதலை கிடைக்கும்.

 வாந்திக்கும்… 

ஒரு இஞ்சித் துண்டில் சிறிது உப்பைத் தூவி, கடவாய்ப் பல்லில் நன்றாகக் கடித்து, அதில் வரும் சாற்றைக் குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாவது மட்டுமில்லை; வாந்தி வருவதும் நிற்கும்.

 

Related posts

தெரிந்துகொள்வோமா? இட்லி – சாம்பார் எடையை குறைக்க உதவுமா? எப்படி ?

nathan

காபிக்கு பதில் குங்குமப்பூ நீர் குடிங்க, சூப்பர் டிப்ஸ்…

nathan

உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?

nathan

இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்

nathan

ஹெல்த்தி சைடுடீஷ்

nathan

நீரிழிவு நோயாளிகள் சிவப்பு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan