மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா செரிமான கோளாறுகளை தவிர்க்கும் சிகிச்சை முறைகள் என்ன…?

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும்.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும் அதிக உணவு, அடிக்கடி சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் வருகிறது. மலங்கழிக்க வேணடும் என்ற உணர்வு இருந்தாலும் மலங்கழிக்க முடியாது.

23296978fc57af8dacdaf5447527decc8832160e1388657686

,இதனால் உடல்கனமாதல், தலைவலி, பசியின்மை, எந்த வேலையிலும் அக்கறையின்மை ஆகியன நேரும். உணவு வெகு நேரம் குடலில் தங்கி இருந்தால் வாயு உருவாகும். அழுகிய நிலை உருவாகும். வயிறு வீங்கி வலி வரும்.

வயிறு, குடல் பகுதியில் உதர வாயு சேர்வதால் அழற்சி உண்டாகும். இது செரிமானக் குறைபாட்டால் நேர்கிறது. வாய் வழியாகவோ, மலக்குடல் வழியாகவோ வாயுவை வெளி யேற்றாவிட்டால் மார்பு பகுதியில் வலியை உண்டாக்கும். இதய நோய் என்று சந்தேகம் வரும். மூச்சு விடுதல் சிரமம் ஆகும்.

அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.

சிகிச்சை முறைகள்:

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும்.

இஞ்சியை தோல் நீக்கி தட்டி(அரைத்து) சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

2 பங்கு ஓமம், 1 பங்கு சோம்பு, சர்க்கரையுடன் கலந்து ஒரு வேளைக்கு 10&20 கிராம் என்ற அளவில் தினமும் இருவேளை கொடுக்கலாம்.

சமஅளவு சுக்குப்பொடி, குறுமிளகுப்பொடி, புதினா, ஓமவல்லி இவற்றைக் கலந்து ஒரு வேளைக்கு 10&30 கிராம் வரை காலை, மாலை இருவேளையும் 7 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button