அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
வலி நிவாரணியை தேவையில்லாமல் எடுத்துப்பதால் , அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் சேர்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடல் சோர்வு, தலை வலி, உடல் வலி போன்ற வலிகளுக்கு எடுத்ததுக்குலாம் வலி நிவாரணியை தேவையின்றி எடுத்து கொள்ளுதல், மற்றும் தானாகவே தீங்கு விளைவித்து கொள்ளுதல் போன்ற செய்கையால் பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க குழந்தை மற்றும் இளைஞர்களை இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதனை Clinical Toxicology என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால் ஒட்டு மொத்த சம்பவங்கள் குறைந்து விட்டன. ஆனால் வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவதால் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக வீரியம் மிக்க வலிநிவாரணிகள் ‘ஓப்பியாய்டு’ எனும் போதை பொருள் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆய்வில் ‘ஓப்பியாய்டு’ தொற்றுநோய் தொடர்ந்து குழந்தை நோயாளிகளுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை சமாளிக்க சுகாதார வளங்கள் இன்னும் தேவைப்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2005 முதல் 2018 வரை 55 அமெரிக்க விஷக் கட்டுப்பாட்டு மையங்களில் 2,07,543 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே ஓப்பியாய்டு உட்கொண்ட குழந்தைகளை கவனிக்கும் குழந்தை மருத்துவர்கள், இந்த நெருக்கடியைத் தணிக்க பயனுள்ள கொள்கை மாற்றங்களுக்கு தொடர்ந்து முயற்சிக்க ஆய்வில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.