இன்றுள்ள நாம் தினமும் பல சூழ்நிலையின் காரணமாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனால் நமது உடலின் சத்துக்கள் அனைத்தும் குறைவது வழக்கம். நமது உடலில் குறையும் சத்துக்களை உலர் திராட்சைகள் மூலமாக மீண்டும் பெறலாம்.
நாம் சாப்பிடும் திராட்சைகளில் உயர்தரமான திராட்சை பழத்தினை பதப்படுத்தி உலர்த்தி பயன்படுத்தி வருகிறோம். இதனையே நாம் உலர் திராட்சை என்று அழைக்கிறோம். உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் குறித்து இனி நாம் தெரிந்து கொள்ளலாம்.
உலர் திராட்சையில் வைட்டமின் சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும்., பச்சையான திராட்சைகளை விட 10 மடங்கு அதிக அளவிலான உடல் உஷ்ணத்தை அலைக்கும். இதில் உள்ள வைட்டமின்கள்., அமினோ அமிலங்கள் உடலுக்கு நன்மையை செய்யும்.
மேலும்., இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் காணப்படுவதன் காரணமாக அமில தொந்தரவு போன்ற பிரச்சனை இருக்காது. நமது இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மஞ்சள் காமாலை பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல அருமருந்து.
இதில் இருக்கும் சுக்ரோஸ் மற்றும் ப்ரெக்டொசும் சத்துக்களின் காரணமாக உடலுக்கு நன்மைகள் கிடைக்கிறது. நோயற்ற வாழ்க்கையே குறைவற்ற செல்வம் என்பதை போலவும்., அளவோடு உலர் திராட்சையை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.