பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே போதும் சளி இருமல் போன்றவை எளிதில் நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது.
இதனால் பல சமயங்களில் அவஸ்தைக்குள்ளாகுவதுண்டு. அதுமட்டுமின்றி பலநேரங்களில் சளி நிறைய தேங்கி இருந்தால் ஒருவித துர்நாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது.
ஏனெனில் ஒருவரது உடலில் சளித் தேக்கம் அதிகம் இருந்தால், அந்த சளியானது வெளியேறும் கட்டத்தில் மூக்கு பகுதியில் துர்நாற்றத்தை உண்டாக்கி விடுகின்றது.
இந்த சளி நுரையீரலில் தேங்கியிருந்தால், அது சுவாசப் பாதையில் இடையூறை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க வைப்பதோடு, தொடர் இருமலையும் உண்டாக்கும்.
அந்தவகையில் தற்போது இந்த துர்நாற்றம் அடிக்கும் சளியிலிருந்து இயற்கை முறையில் எப்படி வெளியாக முடியும் என்பதை பார்ப்போம்.
- ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி அதில் 1 டேபிள் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் மூன்று முறை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேற ஆரம்பிக்கும்.
- 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள பிரச்னை அனைத்தும் குணமாகும்.
- இஞ்சியை ஒருவர் தினமும் 3-4 துண்டுகள் உட்கொண்டு வாந்தாலோ அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் 2 கண் குடித்து வந்தாலோ, இறுக்கமடைந்த சளி இளகி வெளியேறும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து மூடியைக் கொண்டு பாத்திரத்தை மூடி, மிதமான தியில் வைத்து 5-7 நிமிடம் கொதிக்க வைத்து கலவையை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.