கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை.
கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை. கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும் கிருமி நாசினியாகவும் ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டு வலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும் புண்களை ஆற்றியாகவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைகளைப் பெற்றுள்ளன.
கொத்தவரையில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களைக் குணப்படுத்தும் தன்மையை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத மருந்து ஆகும். கருவை சுமக்கும் தாய்மார்களுக்கு தேவையான இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன.
கொத்தவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்தவரையில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது.
மூளையில் ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க கொத்தவரை மருத்துவ உணவாகிய பயன் தருகிறது.