26.6 C
Chennai
Saturday, Dec 28, 2024
0.900.160.90 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா உறவு வைத்துக்கொள்ளும் போது இந்த வகையான புற்றுநோய்களும் பரவுமாம்..

உறவின் மூலம் குறிப்பிட்ட தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்பது நம்மில் அனைவருக்கும் தெரியும். ஆனால் உறவு கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறவு கொள்வதன் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் தான் மனிதபாப்பிலோமா வைரஸ் (HPV) இந்த வைரஸ் தான் உறவின் மூலம் தொற்றுக்கள் மற்றும் குறிப்பிட்ட வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பதிவில் பல உறவுகளை தொடர்கொள்ளும் நபருக்கும் எந்த விதமான நோய்கள் தாக்கக்கூடும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

மனித பாப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் கடுமையான அசாதாரணங்களை கர்ப்பப்பையில் உண்டாக்கும். இந்த வகையான புற்றுநோய் எந்த விதமான ஆரம்ப கால அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. இதை குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும்.

மேலும், மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்ற பிறகும் ஒரு பெண்ணிற்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள்.

ஆசனவாய்

ஆசனவாய் புற்றுநோய்க்கும் மனித பாப்பிலோமா வைரஸிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. மனித பாப்பிலோமா வைரஸ் உடலுறவின் மூலம் பரவக்கூடியது. ஆசன வாயில் வலி, மலம் கழிக்கும் போது சிரமம் மற்றும் இரத்தக்கசிவு போன்றவை ஆசன வாய் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

புற்றுநோயின் நிலைகளைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

யோனி

பெண் இனப்பெருக்க உறுப்புக்களில் வீரியம் மிக்க செல்கள் அல்லது புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உருவாகும் போது, அது யோனி புற்றுநோயை உண்டாக்குகிறது. இதன் முதல் அறிகுறியே இரத்தக்கசிவு தான். மனித பாப்பிலோமா வைரஸ் தான் இந்த வகை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆண்குறி

உறவின் மூலம் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் ஆண்களுக்கு ஆண்குறி புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. இந்த வகை புற்றுநோயின் சில அறிகுறிகளாவன சிவந்திருத்தல், புண், கட்டிகள் மற்றும் இரத்தக்கசிவு போன்றவை.

வாய் புற்றுநோய்

வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோய் இருந்தால் உணவை விழுங்கும் போது வலியை உண்டாக்கும். மேலும், நாள்பட்ட வாய் புண், திடீர் உடல் எடை இழத்தல், தொண்டை புண் போன்றவற்றை ஒருவர் சந்தித்தால், உடலில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

இந்நிலையில் பரிசோதித்து உறுதி செய்யப்பட்டால், புற்றுநோயின் நிலையைப் பொறுத்து கதிரியக்கம், அறுவை சிகிச்சை அல்லது ஹீமோதெரபி போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது.

தடுக்க தடுப்பூசி அவசியம்

உறவினால் புற்றுநோய் வராமல் இருப்பதற்கான சிறந்த வழி என்றால், அது மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி போடுவது தான். இந்த வகை தடுப்பூசி அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்காவிட்டாலும், வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் ஆசன வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

nathan

கைசுத்தம் காப்போம்!

nathan

உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட சகோதர/சகோதரியாக இருப்பீங்க

nathan

இதை ஒரு நிமிஷம் படிங்க… பெண்களே தெரிஞ்சிக்கங்க.அரிசியை ஊற வைப்பதற்கு யோசிப்பவரா நீங்கள்?

nathan

உங்களுக்கு தெரியுமா ஊதுபத்தியில் இவ்வளவு தீங்குகளா..?படிக்கத் தவறாதீர்கள்…

nathan

கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. ! !

nathan

இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் கட்டாயம் இதை திருமணத்திற்கு பின் சாப்பிட வேண்டும்.. முக்கியமான உணவுகள்..!

nathan