29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
prospect of conception
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா கருத்தரித்தலை தள்ளிப் போட உதவும் 8 இயற்கையான வழிகள்

பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்.

* 8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

* ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

* மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.

* அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.

* இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.prospect of conception

* உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.

* உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.

* மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.

இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.-Source: maalaimalar

Related posts

வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க… தெரிஞ்சிக்கங்க…

nathan

குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்

nathan

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த 5 ராசிக்காரர்களின் திருமணங்கள் விவாகரத்தில் முடிய வாய்ப்புள்ளதாம்…

nathan

இந்த வைட்டமின் உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள்!

nathan

எக்ஸாம் வந்தாலே மண்டை குடையுதா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சூப்பர் டிப்ஸ் வொயிட் டீ-ல் நிறைந்துள்ள நன்மைகள்!!

nathan

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் பொய் சொல்வதை தடுப்பது எப்படி ?

nathan