26.7 C
Chennai
Tuesday, Feb 18, 2025
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

பட்டர் நாண்

தேவையானவை

மைதா மாவு – 2 கப்
ட்ரை ஈஸ்ட் – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 5 ஸ்பூன்
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 2 ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்

vfbcxv
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றவும். அதில் ட்ரை ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும். பிறகு அதனை 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை மிதமாக வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ள மாவை வைக்க வேண்டும். நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். அவ்வளவுதான்… பட்டர் நாண் தயார்…!

Related posts

பொட்டேடோ வெட்ஜஸ்-potato veggies

nathan

முட்டை இட்லி உப்புமா

nathan

ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

தனியா துவையல்

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

கிரீன் ரெய்தா

nathan

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan