29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

பெண்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள்

 

பெண்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் இன்றைய இளைய தலைமுறை ஆரோக்கியமாக இருக்கிறார்களோ இல்லையோ, (போலி) ஆடம்பரமாகவும், மார்டன் மங்கைகளாகவும் தான் உலா வருகின்றனர். இந்த ஃபேஷன் பகட்டு அவர்களின் உடல் நலத்திற்கு வேட்டு வைக்கும் என்று தெரிந்தும் அதை பயன்படுத்துகின்றனர். ஹை ஹீல்ஸ் அணிவதால் பிரசவ கால பிரச்சனைகளும், இடுப்பு பிரச்சனைகள் வரும் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தான்.

ஆனால், இறுக்கமான ஜீன்ஸ் அணிவதனாலும், அதிகமான அலங்காரம், ஹேர் கலரிங் போன்றவையும் கூட உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது. “ஸ்கின் ஃபிட்” (Skin Fit) ஜீன்ஸ் அணிவது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாக இருக்கின்றது. இப்படி இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதனால் ஆண்களுக்கு விதைப்பை பிரச்சனைகளும், பெண்களுக்கு ஈஸ்ட் தொற்றுகளும் ஏற்படுகிறது.

இதனால் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் குறைகிறது. இரத்த ஓட்டம் குறைவதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையும், ஆண்மையும் குறைய வாய்ப்புகள் இருக்கின்றது. பொதுவாகவே பெண்களுக்கு ஆண்களை விட எலும்பு விரைவாக வலுவிழக்க ஆரம்பித்துவிடும். அதிலும், ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு இது அதிகரிக்கும்.

ஹை ஹீல்ஸ் அணிவதனால், இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. நீங்கள் ஹை ஹீல்ஸ் அணிகிறீர்கள் என்றால், முடிந்த வரை சமநிலையாக இருக்கும் ஹை ஹீல்ஸ் காலணிகளை தீர்வு செய்யலாம்.

மற்றும் பாதத்திற்கு அழுத்தம் தராத காலணிகளை தீர்வு செய்து அணிவது இடுப்பு வலி ஏற்படாமல் இருக்க உதவும். இப்போது பெண்கள் பயன்படுத்தும், லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா, ரோஸ் பவுடர், ஐ-லைனர் போன்ற அனைத்துமே 100% ரசாயனத்தின் மூலம் தயாரிக்கப்படுவது.

இதை நீங்கள் தினந்தோறும் உபயோகப்படுதினால் விழி வெண்படல அழற்சி, கண்ணில் சீழ்ப்புண், தொற்றுநோய், ஒவ்வாமை, சருமத்தில் நச்சுத்தன்மைப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Related posts

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு 3 வாரங்களுக்கு முன் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

ரெட்டை நாடியை குணப்படுத்தும் தேன் !!

nathan

இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க! சூப்பர் டிப்ஸ்…..

nathan

இன ப்பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?

nathan

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடி மரணமா?

nathan

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

nathan

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர்

nathan

உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan