26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
fgddt
ஆரோக்கியம் குறிப்புகள்

இப்படி யூஸ் பண்ணுங்க. நாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா ?

ஃபவுன்டேஷன் என்பது உங்கள் முகத்தினை பளிங்கு போல் பளபளக்கச் செய்யும் ஒரு அழகு சாதனப் பொருளாகும்.

ஃபவுன்டேஷன் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் பருக்கள், வடுக்கள் மற்றும் காயங்கள் ஆகியவற்றை மறைத்து முகத்தினை பளபளப்பாகத் தோற்றமளிக்க வைக்கும்.

எனவே ஃபவுன்டேஷனை எப்படி இயற்கையான அழகைப் பெற்றது போலப் பயன்படுத்துவது என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவதனால் நீங்கள் இயற்கையான அழகினை பெற்றது போல உங்கள் முகம் ஜொலிஜொலிக்கும்.

கழுவுதல்

தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்பு உங்களின் மேக்கப்பினை காட்டன் கொண்டு சுத்தமாகத் துடைத்து முகங்களை நன்றாகக் கழுவிய பின்பு தான் தூங்க வேண்டும். அப்போது தான் உங்கள் சருமம் சுவாசித்து சருமத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கும். அதேபோல் நீங்கள் ஃபவுன்டேஷன் அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தில் எந்தவித எண்ணெய் இல்லாமல் சுத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

fgddt
ஈரப்பதம்

சில நேரங்களில் ஃபவுன்டேஷன் முகத்தில் உலர்ந்து மற்றும் சீரற்று பரவும். இதற்குக் காரணம் உங்களது வறண்ட சருமமாக இருக்கலாம். எனவே இவற்றைச் சரி செய்ய முகங்களைக் கழுவிய உடன் ஒரு நல்ல மாய்ச்சரைஸரை கொண்டு முகத்தினை ஈரப்பதமாக்குங்கள். இந்த மாய்ச்சரைஸர் உங்கள் முகத்தில் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

ஃபவுன்டேஷன்

இப்போது ஃபவுன்டேஷன் எடுத்து அப்ளை செய்யத் தொடங்குங்கள். ஆனால் ஃபவுன்டேஷன் நீங்கள் தேர்வு செய்யும் போது உங்களின் நிறத்திற்கு ஏற்ற ஒன்றாக இருக்க வேண்டும். பவுடர் ஃபவுன்டேஷனை விட லிக்விடு ஃபவுன்டேஷன் அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.

ஸ்பான்ச்

சருமத்தில் ஃபவுன்டேஷன் தடவி ஸ்பான்ச் கொண்டு டாப் செய்யுங்கள். ஃபவுன்டேஷனை உபயோகிப்பதற்காகவே தற்போது கடைகளில் நல்ல ஸ்பான்ச்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி ஃபவுன்டேஷனை பயன்படுத்தும் போது உங்கள் சருமம் இன்னும் அழகானதாகத் தோற்றமளிக்கும். ஆனால் ஸ்பான்ஜினை கொண்டு ஃபவுன்டேஷனை இழுக்கவோ அல்லது தடவவோ செய்யக்கூடாது. ஸ்பான்ச்சில் ஃபவுன்டேஷனை எடுத்து சருமம் முழுவதும் டாப் செய்யுங்கள்.

கன்சீலர்

ஃபவுன்டேஷன் அப்ளை செய்த பிறகு உங்கள் சருமத்தில் முகப்பரு, சிவப்புநிற புள்ளிகள் அல்லது வடுக்கள் ஏதேனும் இருந்தால் சிறிதளவு கன்சீலரை உங்கள் விரல்களில் எடுத்து முகப்பரு உள்ள இடங்களில் தடவி 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்பு ஸ்பான்ச் கொண்டு மெதுவாக செட் செய்யுங்கள். ஆனால் அவற்றை ஸ்வைப் செய்து விடாதீர்கள்.

பவுடர்

உங்களின் ஃபவுன்டேஷன் மாலை வரையிலும் இருக்க வேண்டுமானால் அதன் மேல் ஒரு ட்ரான்ஸ்லுசென்ட் பவுடரை டி வடிவில் அப்ளை செய்யுங்கள். இந்த பவுடரை அனைத்து வகையான சருமம் கொண்டவர்களும் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகத்தில் எண்ணெய் அதிகமாக வடியும் இடங்களில் இந்த பவுடரை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

முழுமையான தோற்றம்

நீங்கள் இந்த முறைகளை எல்லாம் பின்பற்றி ஃபவுன்டேஷனை அப்ளை செய்யும் போது மென்மையான பளபளப்பான மற்றும் நாள் முழுவதும் கலையாத அழகான தோற்றத்தைப் பெறுவீர்கள். இப்போது உங்கள் செல்ஃபிக்கு ஹை சொல்லுங்கள்.

Related posts

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?

nathan

தயவு செய்து இதை படிங்க. மாத விடாய் வலி ( Period pain ) நீங்க இனி கவலை வேண்டாம்

nathan

அடிக்கடி அழுறவங்களா நீங்க? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இளம் வயதினரை திருமணம் செய்யக்கூடிய 4 ராசிகள்

nathan

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

nathan

வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ்.. டிப்ஸ்…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலில் பொறுமை என்பதே கிடையாதாம்…

nathan

அலட்சியம் வேண்டாம்?இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் பேராபத்து! படுக்கையறையில் இருந்து தூக்கி வீசுங்கள்….

nathan

டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது!…

sangika