29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
uuffggfr
ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கும், கருவுற்ற தாய்மார்களும் பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

பச்சை பட்டாணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை எளிதாக சூப் வைத்துக் கூட நீங்கள் பருகி வரலாம். பாஸ்தா மற்றும் சாலட் போன்றவற்றில் கூட நீங்கள் இதை பயன்படுத்தி வரலாம்.

இந்த பச்சை பட்டாணியில் போலிக் அமிலம், வைட்டமின் கே, வைட்டமின் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே இதை குழந்தைகளுக்கும், கருவுற்ற தாய்மார்களும் சாப்பிடுவது நல்லது.

எடை இழப்பு

பட்டாணியில் நார்ச்சத்துகள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. இதில் கொஞ்சம் இனிப்பு இருந்தால் கூட சர்க்கரை நோயாளிகள் ஏராளமான உடல் நல நன்மைகளுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம். காரணம் இதில் அதிகளவு நார்ச்சத்துகள் உள்ளன. கலோரிகளும் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள், டயட் இருப்பவர்கள் கூட இதை எடுத்துக் கொள்ளலாம். மேலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். நீண்ட நேரம் பசிக்காது. இன்சுலினை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் காணப்படும் புரதம் மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தது. எனவே தான் இதை சைவ புரோட்டீன் பவுடராகவும் பயன்படுத்துகின்றனர்.
uuffggfr

அல்சைமர் நோய்

பட்டாணியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரிஷன்களான ஆல்ஃபா கரோட்டீன், பீட்டா கரோட்டீன், கூமெஸ்ட்ரோல், கேட்டசின் மற்றும் எபிகாடெசின் போன்ற சத்துக்கள் உள்ளன. இது முகச் சுருக்கம், அல்சைமர் நோய், ஆர்த்ரிட்ஸ், மூச்சுக் குழாய் அழற்சி, ஆஸ்டியோபோரோஸிஸ் ஏன் குடல் புற்றுநோயைக் கூட குணப்படுத்தும் ஆற்றல் இதில் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பட்டாணியில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறான பாலிமியோஎத்தனோலாமைடு (PEA) என்ற சத்து உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் வலி நிவாரணி தன்மையை கொண்டுள்ளது. அல்சைமர் நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

வலுவான எலும்புகளுக்கு

பட்டாணியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், மக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற நோயின் விளைவை அதிகரிக்கிறது.

சீரண சக்தியை மேம்படுத்துகிறது

பட்டாணியில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இது நிறைய வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை களைகிறது. மேலும் சீரண சக்தியை வலுப்படுத்துகிறது. மேலும் பட்டாணியில் உள்ள சில மூலக்கூறுகள் ஹைபோகொலெஸ்டிரோலெமிக் (கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு) மற்றும் புற்றுநோய்க்கு எதிரான (புற்றுநோய் தடுப்பு) பண்புகளையும் கொண்டுள்ளது.

வயதாவதை தடுக்கிறது

பட்டாணி பல தோல் கோளாறுகளை போக்க உதவுவதோடு வயதான சருமத்தின் அறிகுறிகளையும் குறைக்கிறது. காரணம், பட்டாணியில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. புள்ளிகள், சுருக்கங்கள் போன்ற தோல் பிரச்சினைகளை அகற்றும் திறனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கடுகு எண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…?

nathan

ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

பெண்களுக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு!கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த பீட்ரூட் சூப்.

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan

ஒரே வாரத்தில் 3 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக இதுவும் உள்ளதாம்….

sangika