27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
ஆரோக்கிய உணவு

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

 

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா

தேவையானவை:  (சப்பாத்திக்கு) முழு கோதுமை மாவு – 500 கிராம்,  உப்பு – 10 கிராம்,  வனஸ்பதி – 25 கிராம்,  சுத்தமான  தண்ணீர் – 200 மி.லி.

வெஜிடபிள் குருமா செய்ய:
நறுக்கிய வெங்காயம் – 100 கிராம், நறுக்கிய தக்காளி, தேங்காய்த் துருவல்,
காலிஃபிளவர், கேரட் – தலா 50 கிராம், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 30 கிராம்,
பச்சை மிளகாய் – 1 (அ) 2, மஞ்சள் தூள் – 10 கிராம், மிளகாய்த் தூள் – 20
கிராம்,  பெருஞ்சீரகம் – 15 கிராம்,  எண்ணெய் – 50 மி.லி, கிராம்பு,
லவங்கப்பட்டை – தலா 5 கிராம், பச்சைப் பட்டாணி – 25 கிராம், பீன்ஸ்,
உருளைக்கிழங்கு – தலா 40 கிராம், முந்திரிப் பருப்பு – 25 கிராம்.

செய்முறை:
பாத்திரத்தில் கோதுமை மாவு, வனஸ்பதி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப்
பிசையவும். சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தியாக தேய்த்து,
சுட்டெடுக்கவும்.

1429378455 p34c

வெஜிடபிள் குருமா செய்முறை:
தேங்காய், சீரகம், முந்திரிப் பருப்பை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை சற்றே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளவும். கடாயில்  எண்ணெய்
விட்டு கிராம்பு, லவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம்
சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி
துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், காய்கறிகள் சேர்த்து கிளறி மூன்று
முதல் நான்கு நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு தேங்காய், சீரகம், முந்திரி
கலந்த பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து
இறக்கவும்.

பலன்கள்: முழு
கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி என்பதால், மாவுச்சத்து, நார்ச்சத்து,
புரதச்சத்து அதிகளவு உடலுக்கு கிடைக்கும். மேலும் கால்சியம், வைட்டமின்
பி,  பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். மலச்சிக்கல்
பிரச்னை நீங்கும்.

காலிஃபிளவரில் உள்ள சல்பரோபேன் (sulforaphane) புற்றுநோய் செல்களை
வளரவிடாமல் தடுக்கும். மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. பச்சைப்
பட்டாணியில் பாலிபீனால் அதிகம் இருப்பதால் வயிற்று புற்றுநோய் வரவிடாமல்
தடுக்கும். மேலும் குருமாவில் உள்ள காய்கறிகளில் நார்ச்சத்து, ஆன்டி
ஆக்ஸிடன்ட், பீட்டா கரோட்டின், ஃபோலேட், பொட்டாசியம் அதிகளவு இருப்பதால்,
கண் பார்வை தெளிவாகும். அல்சைமர் என்ற மறதி நோய் வராமல் தடுக்கும்.
குருமாவில் குறைந்த அளவு உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.அனைவருமே
சாப்பிட ஏற்ற டிஷ் இது.


 

Related posts

நீங்கள் நிறைய சாக்லேட் சாப்பிடுபவரா ??அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

வயதாவதையும் தடுக்கும் சூப்பர் பழம்!!

nathan

ஆரோக்கியத்திற்கு நல்லது கொய்யா ….

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… காய்கறிகளை வாங்கும்போது கட்டாயம் இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்..

nathan

எந்த உணவுப் பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லதுன்னு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிட்டும் உடம்பு வெயிட் போடாமல் இருப்பது எப்படி?

nathan

தெரிந்துகொள்வோமா? இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வல்லாரை கீரையில் உள்ள வல்லமை இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

nathan