தலைமுடி சிகிச்சை

எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க

மிருதுவான கூந்தல் நமக்கே ஒரு குஷியை தரும். எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? எல்லா சமயங்களிலும் நமக்கு கூந்தல் அப்படி இருக்காது.

தலைக்கு குளித்தன்று மிகவும் மிருதுவாக உணர்வீர்கள். அதன் பின் வரும் நாட்களில்? வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதுதான் நிறைய பேருக்கு ஏற்படும். எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க நாம் வாரம் ஒரு நாளாவது பராமரிப்பு தேவை.

வாரம் ஒரு நாள் இதற்கென நேரம் ஒதுக்கி செய்து பாருங்கள். பின் தலை குளித்து ஐந்து நாட்களானாலும் கூந்தல் மிருதுவாக இருக்கும். அப்படியான ஒரு அருமையாக குறிப்புதான் இது.

தேவையானவை : கற்றாழை சதைப் பகுதி – கால் கப் தேங்காய் எண்ணெய் – கால் கல் தேங்காய் பால் – அரை கப் அல்லது தேவையான அளவு

கற்றாழை அதிக அமினோ அமிலங்களையும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளையும் கொண்டது. இவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும். தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, பொடுகு போன்ற தொல்லைகளிலிருந்து காக்கும்.

தேங்காய்ப் பால், கூந்தலுக்கு போஷாக்கையும், மிளிரும் கூந்த்லையும் தரும். தவிர அதில் அதிக புரதச் சத்து உள்ளது. இது ஸ்கால்ப்பை ஊடுருவி, மயிர்க்கால்களை வளரச் செய்யும்.

கற்றாழையின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய்ப் பால் கலந்து முடிகளின் ஸ்கால்ப்பில் தடவுங்கள். பிறகு நுனி வரை தடவவும்.

இவை உடல் முழுவதும் ஒழுகாமல் இருக்க தலையை ஷவர் கேப் கொண்டு மூடிடுங்கள். அரை மணி நேரம் கழித்து நல்ல தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு கூந்தல் அலசுங்கள். அந்த வாரம் முழுவதும் கூந்தம் மிருதுவாக இருக்கும்.

massage 19 1471605773

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button