24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம் குறிப்புகள்

பேன் தொல்லையா?

 

பேன் தொல்லையா? >வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாக இருக்கும். இதனால், பேன், பொடுகு அண்டாது. எண்ணெய் தடவாத தலைமுடி வறண்டு போகும் போது, அடுத்தவர்களிடம்  பேன் இருந்தால் அது நம் தலையில் தொற்றிக்கொண்டு விடும்.

தலையில் எண்ணைய் தேய்த்து சீப்பால்  வாரும்போதே பேன் தலையில் தங்காமல் வெளியே வந்துவிடும். அதேபோல சுருட்டையான முடியில் பேன்கள் வந்தால் சீக்கிரத்தில் போகாது. தினமும் எண்ணைய் தடவி சீப்பால் படிய வாரிக் கொண்டால், பேன் தொல்லை இருக்காது. அவசர கதியில் எண்ணைய் தடவாமல் விட்டாலும் பேன் இரண்டு மடங்காகப் பெருகிவிடும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தலையில் பேன் அண்டாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். இந்த வயதில் ஏற்படக்கூடிய பேன் தொல்லைக்கு, பேன் போக்கும் தைலத்தை நன்கு தலையில் தேய்த்து, நன்கு சீவி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர், கடலைமாவு இரண்டு டீஸ்பூனுடன் ஒரு டீஸ்பூன் சீயக்காய்த்தூள் கலந்து, தலையை அலச வேண்டும்.

வாரம் இருமுறை இவ்வாறு செய்வது நல்லது. பேன் தொற்றி இருந்தால் உடனே அவை வெளியே வந்து விடும். கடையில் விற்கும் கெமிக்கல் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை அலசுவதால், பேன் மேலும் பெருகி காது, கழுத்து ஓரங்களில் ஈறு ஒட்டிக்கொள்ளும். அப்போது தலையை சொரிந்துகொண்டே இருப்பதால் தலையில் புண் ஏற்பட்டு விடும்.

மேலும், பேனும் ஈறும் சுலபமாக மற்றவருக்கும் தொற்றிக் கொள்ளும். தலைமுடியைச் சுத்தமாக வைத்திருப்பதை சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

சீயக்காய் 1 கிலோ, பஞ்சு கடுக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ, பச்சை பயறு கால் கலோ, உலர்ந்த செம்பருத்தி 100 கிராம்… இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கடுக்காய் தூளை ஆயில் பாத் எடுக்கும் போதெல்லாம் தலைக்கு தேய்த்து குளித்துவந்தால், கொஞ்ச நாளிலேயே பொடுகு, அரிப்பு, செதில், பேன் உள்பட சகலத்தொல்லைகளும் போய்விடும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள்!

nathan

அதிகாலையில் எழுவதில் என்ன நன்மைகள்

nathan

பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?

sangika

தெரிஞ்சிக்கங்க…நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

nathan

நீங்க இந்த பானம் குடிப்பதால் உங்க குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்…!

nathan

முதியோர்களுக்கான டயட் டிப்ஸ்

nathan

ஸ்ட்ராபெரி

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களின் வயதும்.. குழந்தை பாக்கியமும்…

nathan

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டுமா?

nathan