27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
fhghg
மருத்துவ குறிப்பு

ஹெல்த் ஸ்பெஷல் குழந்தையின்மை காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

கட்டிகள் புற்றுநோய்கள்:

கருப்பை அல்லது அது சம்பந்தப்பட்ட பகுதியில் ஏதேனும் கட்டிகள் அல்லது புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதும் மற்றொரு காரணமாக அமைகின்றது.

எனவே இந்த கட்டிகளை அகற்றுவதன் மூலம் இந்த குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்ய முடியும்.
பெண் கருவுறாமைக்கான காரணங்கள்..! பகுதி -1
குழந்தையின்மை போக்க சத்தான உணவுகள்:

பெண்கள் வெளியே வேலை பார்ப்பது மற்றும் கூடுதலாக வீட்டையும் நிர்வகிப்பதால் துளி கூட அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. எனவே பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, தினமும் சத்தான உணவான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தினமும் அதிகளவு உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தைராய்டு பிரச்சனை:

பெண்களுக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், இந்த குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். எனவே தைராய்டு பிரச்னையுள்ளவர்கள் அதற்கான சிகிச்சை முறையினை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
கருப்பை தொற்றுநோய்:

முன்பே ஏதாவது தொற்றுநோய் கருப்பையில் ஏற்பட்டிருந்தாலும் இந்த குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே இந்த நோயிக்கும் அதற்கான சிகிச்சை முறையினை மேற்கொள்ள வேண்டியது மிகவும் நல்லது.
மாத்திரைகள்:

உடலில் ஏதாவது தீர்க்க முடியாத நோய் இருந்து, அவற்றை குணப்படுத்துவதற்க்காக அதிக வீரியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதினாலும் இந்த குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

மரபு வழி பிரச்சனைகள்:

குறிப்பாக பிறப்பிலேயே கருவுறாமைக்கான பிரச்சனைகள் இருப்பது, பெற்றோர்கள் வழி மரபில் கருவுறுவதில் பிரச்சனை இருக்கும் போது பிள்ளைக்கு அந்த குழந்தையின்மை பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
கருப்பை வாய் சளி:

கருப்பை வாய் சளி தடிமனாக இருப்பது. அதனால் விந்தணு பெண்ணின் கர்ப்பபையைச் சென்று அடையத் தாமதமாகிவிடுகிறது. இதனால் விந்தணு இறந்து விடுகிறது. கருப்பை வாய் சளியின் தரத்தை அதன் நிறத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். முட்டையின் வெள்ளை திரவத்தைப் போல அது இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோய்:

இந்த நீரிழிவு நோய்க்கு ஆளான பெண்கள் சிலருக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
fhghg
எந்த வகை பரிசோதனைகள் மூலம் குழந்தையின்மை பிரச்சனை கண்டறியப்படுகின்றது:

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.
இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெண் குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் (Infertility Treatment):

உடலில் உள்ள சுரப்பிகள் சரியான விகிதத்தில் சுரக்க சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது.
இதனால் முதலில் சீரற்ற மாதவிடாய் சீர் படுத்தப்படுகிறது.
அண்டவிடுப்பின் செயல்பாட்டைச் சீர்படுத்துவது.
தேவையான சத்துக்களை உடலில் சேர்த்து கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்துவது.
ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதற்கான அண்டிபயோடிக்ஸ் கொடுத்து குணப்படுத்துவது.
தேவைப்பட்டால் சிறு அறுவைசிகிச்சை செய்து கருப்பை குழாய், கருப்பை மற்றும் அது தொடர்பான பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்வது.

ஐவிஎப் மற்றும் ஐயுஐ (Infertility Treatment):

இந்த சிகிச்சை (infertility treatment) முறைகள் மட்டுமின்றி ஐவிஎப் மற்றும் ஐயுஐ போன்ற மருத்துவச் சிகிச்சை முறையும் நடைமுறையில் உள்ளது. எனினும் இவை சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். இவற்றின் பலன்களும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஏற்றவாறே இருக்கும்.

Related posts

வாழ்க்கையை இன்பமாக்கி கொள்ள உறவுகளின் துணை தேவை

nathan

இப்படி இருந்தால் ஆபத்து? பச்சை உருளைக்கிழங்கு நஞ்சா?

nathan

குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும்

nathan

கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

nathan

அவசியம் படிக்க..உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!

nathan

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான 9 அசத்தலான வழிகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

அகத்திக்கீரை

nathan

மஞ்சளை வைத்தே பற்களை எப்படி வெள்ளையாக்குவது எப்படி? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

நரம்புகள் நன்கு புடைத்தபடி வெளியே தெரிந்தால்…

nathan