சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது தேங்காய்ப் பால் அரை டம்ளர் ஊற்றிக் கிளறிய பின் இறக்கவும். இவ்வாறு செய்தால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
வாழைப்பழங்கள் வெளிப்படுத்தும் வாயுக்கள் மற்ற பழங்களை எல்லாம் விரைவாக பழுக்க வைத்துவிடும், அதனால் வாழைப்பழத்தை தனியாக வைப்பது நல்லது.
ஆப்பத்துக்கு பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அரைத்தால் மொறுமொறு என்று இருக்கும்.
பலகாரம் செய்யும்போது கொய்யா இலையை எண்ணெய்யில் போட்டு எடுத்துவிட்டு பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
தக்காளியின் தோல் நீக்க மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் தக்காளியை சிறிது கீறிவிட்டு சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாக வந்துவிடும். சேனைக்கிழங்கு நறுக்கும் முன்பாக கையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.
கத்தரிக்காய் வாடாமல் இருக்க ஹாட் பாக்ஸில் வைத்து கத்திரிக்காயை மூடினால் காய் வாடாமல் இருக்கும்.
பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் போட்டு எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடவும். பிரெட் பக்கோடா சுவையாக இருக்கும்.
பிதுவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைப்பதால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.