29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
ஆரோக்கிய உணவு

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

 

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர் கோடை வெயிலுக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் மிகவும் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரி பங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி, சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் சிறந்த மருந்து இதுதான்.

ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம், உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு. சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது. அந்த நேரங்களில் ‘ஸ்பெஷல் மோர்’ குடிக்கலாம்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்தத் தண்ணீர் ஆறியதும் இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். முக்கியமான விஷயம், மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது என்பதில் கவனம் வேண்டும்.

Related posts

வெரிகோஸ் வெயின் குணமாக

nathan

இதெல்லாம் தெரியமால் போச்சே! அடேங்கப்பா! சாதாரண கருப்பட்டியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

nathan

பக்க விளைவு அறவே இல்லை… தமிழர்கள் மறந்து போன அதிசக்தி வாய்ந்த கருப்பு உணவு பொருள்!

nathan

சுவையான பாகற்காய் சட்னி

nathan

தெரிந்துகொள்வோமா? சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு நிவாரணிகள்!!!

nathan

சர்க்கரை நோய் மற்றும் பெண் மலட்டு தன்மையை போக்கும் நாவல் பழம்

nathan

புதினா அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் காயகல்பம் என்பது தெரியுமா ?அப்ப இத படிங்க!

nathan

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்!!!

nathan

இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை

nathan