24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
6250.160.90
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா பணம் கொட்டும் கை ரேகை!! 6 அறிகுறி !!

கைரேகை ஒருவரது நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக சொல்லும்.

ஒரு சிலருக்கு எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணத்திற்கு அதிகமாக செலவுகளை செய்பவர். அவர்களது நிதி நிலைமை எப்போதும் சிறப்பாக இருக்காது.

ஆகவே உங்களது நிதி நிலைமை பற்றி அறிந்து கொள்ள கையில் உள்ள கைரேகைளின் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். அவை என்ன அறிகுறிகள் என்று பார்ப்போம்.

அறிகுறி 1

கையில் நடு விரலை நோக்கி நேராக ஒரு ரேகை சென்றால், அது ஒருவரது நிதி நிலைமையைப் பற்றி தான் சொல்கிறது என்று அர்த்தம்.

ஒருவரது கையில் உள்ள இந்த ரேகையின் அடிப்பகுதி மிகவும் ஆழமாக காணப்பட்டால், அவர் இளம் வயதிலேயே செல்வந்தராக இருப்பாராம். ஒருவேளை இந்த ரேகையின் மேல் பகுதி ஆழமாக இருந்தால், அவர்கள் வாழ்வின் பிற்காலத்தில் செல்வந்தராகும் வாய்ப்புள்ளதைக் குறிக்குமாம்.

மேலும் இந்த ரேகை ஒருவரது வாழ்க்கை குறித்தும் கூறுகிறதாம்.

அதில் அடிப்பகுதியில் இருந்து நடுவிரலை நோக்கி செல்லும் ரேகை மிகவும் ஆழமாகவே இருந்தால், அவர்களது வாழ்க்கை நிலையானதாகவும், லாபகரமானதாகவும் இருக்குமாம்.6250.160.90

அறிகுறி 2

கையில் இருக்கும் பெருவிரலுக்கு அடிப்பகுதியில் இருந்து ஆள்காட்டி விரலை நோக்கி ரேகை சென்றால் பணம் சம்பாதிப்பதற்கான ஏராளமான அற்புத வழிகள் உங்கள் கைவசம் இருக்கிறதாம்.

இந்த ரேகை ஒருவர் உடனே செல்வந்தர் ஆகப் போவதையோ அல்லது வாழ்வின் எந்நேரத்திலும் செல்வந்தர் ஆகும் வாய்ப்புள்ளதையோ குறிக்காது.

இருப்பினும், இந்த ரேகை, உங்களுக்கும் பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான தகுதி மற்றும் ஆற்றல் இருப்பதைக் குறிக்கிறது.

எனவே நிதி நிலைமையில் வெற்றி அடைய நினைத்தால், முயற்சியைக் கைவிடாதீர்கள்.

அறிகுறி 3

ஒருவரது கையில் உள்ள ரேகைகளில் பெருவிரலுக்கு அடியில் இருந்து சுண்டு விரலின் அடிப்பகுதியை நோக்கி ரேகை செல்லுமாயின், அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து பரம்பரை சொத்து கட்டாயம் வரும் என்பதைக் குறிக்குமாம்.

இத்தகைய ரேகை மிகவும் நீளமாக இருந்தால், வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான பணம் கிடைப்பதைக் குறிக்கும்.

ஒருவேளை இந்த ரேகை நீளமாகவும், ஆழமாகவும் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு கிடைக்கும் பரம்பரை சொத்து வாழ்வில் உறுதுணையாக இருக்க முடியாதாம். முக்கியமாக இந்த வகையான ரேகையைக் காண்பது மிகவும் அரிது.

அறிகுறி 4

படத்தில் காட்டப்பட்டவாறு பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து, நடுவிரலை நோக்கி ரேகை செல்லுமாயின், அவர்கள் சுய தொழிலில் சிறப்பானவர்களாக இருப்பர் என்பதைக் குறிக்குமாம்.

இந்த ரேகை மிகவும் ஆழமாக காணப்பட்டால், அவர்கள் செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை தொடர்ச்சியாக காண்பர்.

இந்த வகை ரேகையைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் சிறப்பான தொடர்பை கொண்டிருப்பார்கள் மற்றும் சிறந்த மார்கெட்டிங் திறனைக் கொண்டவர்களாகவும் இருப்பர்.

அறிகுறி 5

ஒருவரது பெருவிரலின் அடிப்பகுதியில் நிறைய சிறு ரேகைகள் இருந்தால், அது உங்கள் வாழ்வில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கும் என்பதைக் குறிக்கும்.

அதிகமான ரேகையை ஒருவர் கொண்டிருந்தால், அவர்கள் அதிகளவு செல்வம் கொண்டவர்களாக இருப்பர்.

அறிகுறி 6

உங்கள் உள்ளங்கையின் மேற்பரப்பும் ஒருவரது பண விடயத்தைப் பற்றி வெளிப்படுத்துமாம்.

தட்டையான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கையில் பணம் எப்போதுமே தங்காது.

வளைவான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கையில் பணம் அதிகம் சேருமாம். அதாவது ஒருவர் கையால் நீரை எடுக்கும் போது, உள்ளங்கையில் நீர் தேங்கினால், அவர்களது கையில் பணம் சிறப்பாக நிலைத்திருக்கும்.

Related posts

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்

nathan

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

nathan

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!தெரிஞ்சிக்கங்க…

nathan

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தாய் வீட்டிலிருந்து இதையெல்லாம் கணவன் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள்!

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika