தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது.
அதற்காக பலர் அதிகம் செலவு செய்வதையும் பார்த்திருப்போம். இதுபோன்று அதிகம் செலவு செய்ய இயலாதவர்கள் வீட்டில் கிடைக்கும் ஒருசில பொருட்களை வைத்தே தங்கள் முகத்தை பளிச்சென மாற்றலாம்.
1 . வெள்ளரிக்காய் + உருளை கிழங்கு:
ஒரு முழு உருளை கிழங்கை சாறாக பிழிந்து அதனுடன் வெள்ளரிக்காயின் சாறை சேர்த்து அதை ஒரு பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
2 . வெள்ளரிக்காய் + பால் பவுடர்:
சிறிதளவு வெள்ளரிக்காய் சாறுடன் சிறிது பால் பவுடர் கலந்து பேஸ்ட் போல் செய்து அதனை முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென மாறும். இந்த கலவையில் முட்டையின் வெள்ளை கரு சிறிது சேர்த்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
3 . வெள்ளரிக்காய் + கற்றாழை:
வெள்ளரி சாறு சிறிதளவு, இரண்டு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் மற்றும் சிறிதளவு தயிர். இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்துவர கருமை நீங்கும். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை முயற்சிக்கலாம்.
4 . வெள்ளரிக்காய் + கடலைமாவு:
முகத்திற்கு கடலை மாவு போடுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த கடலை மாவுடன் சிறிதளவு வெள்ளரிக்காயின் சாறு சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் பளிச்சென மாறும்.