28.8 C
Chennai
Thursday, Jul 17, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

130424154523-angry-young-woman-story-topகோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.

4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும். ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

Related posts

வெள்ளைப்படுதல், அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்….

nathan

முயன்று பாருங்கள் உலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்

nathan

healthy tips, குழந்தையின் மலச்சிக்கலுக்கு உடனடி பலன் தரும் வைத்தியம்.

nathan

சிறந்த லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவதால் ஏற்படும் பாதகங்கள்

nathan

பயன்தரும் சில எளிய குறிப்புகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்களால் ஆண்கள் சந்திக்கும் 10 பிரச்சனைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண் குழந்தை பிறக்கும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?

nathan

வெந்நீரில் உப்பு கலந்து கண்களை கழுவுங்கள்!

nathan