24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
fhjfhj
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உணவு முறைகள் என்ன…?

குழந்தைகளுக்கு பிறந்து 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்கும் முன் என்னென்ன உணவுகளை எப்போது கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுதல் அவசியம். திட உணவு கொடுக்கும் போது மென்மையான காய்கறிகளை கொடுக்கவும் பின்பு பழங்கள் போன்றவற்றை சிறிது சிறிதாக சேர்க்கவும்.

குழந்தைகளுக்கு அந்த உணவின் சுவை பிடிக்கும் வரையில் அவர்கள் அதனை சாப்பிடுவது கடினம் எனவே அந்த சுவையை பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள் அதனால் பால் அல்லது தண்ணீரில் பிஸ்கெட்டை ஊறவைத்து கொடுக்கலாம்.
fhjfhj
திட உணவு முறைகள்:

முதன் முறையாக உணவு கொடுக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கொடுக்க வேண்டும். இரண்டாவது நாள் 2 டேபிள் ஸ்பூன் 3வது நாள் மூன்று டேபிள் ஸ்பூன் கொடுக்கலாம்.

திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் முன், பழங்களை மசித்து அதன் சுவையை குழந்தைக்கு பழக்கப்படுத்துவது சிறந்தது. பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை கொடுக்கும் முன், மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது.சில உணவுகள் குழந்தைகளுக்கு ஓவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் இது பரிந்துரைக்க படுகிறது.

காய்கறிகள் மற்றும் இறைச்சி குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலிமைப்படுத்தவும் உதவுகின்றன.

இறைச்சியில் நிறைந்திருக்கும் புரதம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காய்கறிகளும், இறைச்சியும் வெவ்வேறாக இருந்தாலும், குழந்தைகள் உடலின் வெவ்வேறு பாகங்கள் வளர்ச்சியடைய உதவுகின்றன.

குழந்தைகளுக்கு கால்சியம் சத்து உள்ள பொருட்களை சேர்க்க வேண்டும் அப்போது தான் அவர்களின் உடம்பில் உள்ள எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக உதவும்..

குழந்தைகளின் எலுப்பு மண்டலம் நன்கு வளர்ச்சி அடையும்.ஆகவே குழந்தைகளுக்கு நல்ல ஊட்ட சத்து நிறைந்த உணவுகள் கொடுத்தால் குழந்தையின் உடலுக்கு எந்தவித நோய்யும் வராது.

Related posts

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika

பழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா?

nathan

வைட்டமின் சி தரும் ஆரோக்கிய நலன்

nathan

தெரிஞ்சிக்கங்க…திருமணத்திற்கு முன்பு நிறைவேற்ற வேண்டிய கடமைகள்

nathan

இதை ஒரு துளி வெந்நீரில் விட்டு தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர…. விரைவில் உடல் எடையை குறைக்கலாம்!

nathan

மச்சம் பலன்கள் தெரியுமா? இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டமாம்

nathan

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

வாய்ப்புண்ணை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்!!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க… நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க… உங்க குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்…

nathan