mjbkjhlkhlk
அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள்..முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

சிலருக்கு முழங்கை, முழங்கால்களில் கருமைப் படர்ந்திருக்கும்.

அந்த கருமை நீங்க:
கருமை படர்ந்திருக்கும் இடத்தில் பழுத்த எலுமிச்சைப் பழச்சாற்றை நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பயத்தம் மாவு போட்டுத் தேய்த்துக் கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.

குளிக்கும் நீரில் துளசி இலைகளைப் போட்டுக் குளித்தால் சருமத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
வேப்பிலையைத் தண்ணீரில் சாறு இறங்க ஊறப்போட்டுக் குளித்தால் கருமை நீங்கி மேனி பொலிவு பெறும்.
mjbkjhlkhlk

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும். இரவு படுக்கும் முன் புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரைமூடி எலுமிச்சம்சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவைக் கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும்.

குளிர், பனி காலங்களில் குளித்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யுடன் ஒரு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து கை, முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவிவிடுங்கள். இச்செய்கையால் நாள் முழுவதும் தோல் பளபளப்பாக இருப்பதுடன், வறட்டுத்தன்மையும் இருக்காது.

ujtiutiutu
முகம் வறண்டு பளபளப்பின்றி இருப்பதற்கு தோலுக்குரிய சத்துகள் குறைவதே காரணம். ஆகவே, தோலுக்கு சக்தியளிக்கக்கூடிய காய்கறிகள், முட்டை, பால், மீன், கீரை வகைகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்.

வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை அரைத்து ஒரு சிறு உருண்டை சாப்பிட்டு வர, இளநரை மறையும்.

வெள்ளரித் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதன் சாற்றினை முகம் முழுவதும் குறிப்பாக கண்களின் அடிப்பகுதிகளில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்து கடலைமாவு கொண்டு கழுவினால் கரும் புள்ளிகள் தேமல் மறையும்.

பழுத்தப் பப்பாளி பழத்தில் ஒரு துண்டு எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்து, பயத்தமாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்து கழுவினால் வறண்ட தோலும் மினு மினுக்கும்.

Related posts

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம் இதை செய்யுங்கள்…

sangika

தங்கர் பச்சான் சரமாரி கேள்வி – பணம் போட்டவரையும் சந்திக்க மாட்டாரு, ரசிகர்களையும் சந்திக்க மாட்டார்?+

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

அழகான நீண்ட கூந்தலுக்கு, பளபளக்கும் சருமம் அரிசி கழுவிய நீர்..!!

nathan

அடேங்கப்பா! Skin Colour Dress இல் அரேபிய குதிரை போல் இருக்கும், ராஷி கண்ணாவின் Hot photo-shoot !

nathan

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்

nathan

கோடையிலும் முகம் பளபளப்பா இருக்கணுமா?

nathan

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

nathan