அழகு குறிப்புகள்ஆரோக்கியம்கை பராமரிப்பு

உலோக அணிகலன்கள் அணிவதன் நன்மைகள் பற்றி தெரியமா?

sempu ring

உலோகங்கள்

உலோகங்களுக்கு குணப்படுத்தும் தன்மை இயற்கையிலேயே உள்ளது. தாமிரம், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு பின்னரே உலோகங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது, ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும்.

தாமிரம்

அனைத்து உலோகங்களை விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

தாமிரத்தை அணிவது மட்டுமின்றி அந்த பாத்திரத்தில் சாப்பிடுவதும் கூட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் உங்களை தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். இந்த காப்பர் சாஸ்திரரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.

sempu ring

கிருமி எதிர்ப்பு

காப்பர் மோதிரம் அணிவது உங்களை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.

விரல்களில் செம்பு மோதிரம் அணிவது உங்கள் உடலில் நச்சுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதை குறைக்கும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

வாஸ்து தோஷம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி செம்பு மோதிரம் அணிவது உங்கள் வீட்டின் வாஸ்துவை சிறப்பானதாக மாற்றும்.

இது உங்கள் வீட்டின் சூழ்நிலையை சுத்தமாக வைத்திருப்பதுடன் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை சக்திகளை அதிகரிக்கவும் செய்கிறது.

சூரியனின் விளைவு

சூரிய மண்டலத்திலேயே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். இது உங்கள் மீது நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும், கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தும்.

செம்பு மோதிரத்தை அணியும் போது அது உங்களின் தனிப்பட்ட நேர்மறை சக்தியை அதிகரிப்பதுடன் சூரியனால் ஏற்படும் கெட்ட பாதிப்புகளை தடுக்கும்.

அமைதியை ஏற்படுத்தும்

இன்றைய மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் கோபமும், வெறுப்பும் அதிகம் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் செம்பு மோதிரம் அணியும்போது அது நமது கோபத்தை கட்டுப்படுத்துவதுடன் உங்கள் உடலின் வெப்பநிலையையும் சமநிலையில் வைத்திருக்கும்.

வேலை பிரச்சினைகள்

நீங்கள் உங்கள் வேலையில் அதிக பிரச்சினைகளை உணர்ந்தாலோ அல்லது நிறைய தொந்தரவுகளையும், தடைகளையும் சந்தித்தால் நீங்கள் மோதிர விரலில் செம்பு மோதிரம் அணிவது நல்லது. இது உங்களின் வெற்றிக்கு உதவியாய் இருக்கும்.

மகாதசா

உங்கள் வாழ்க்கையில் சூர்ய மகாதசா ஏற்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அனைத்துமே தவறாகத்தான் செல்லும், உங்கள் வாழ்க்கை ஒரே இடத்தில் நின்றுவிடும்.

செம்பு மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் சூர்ய மகாதசாவின் பாதிப்புகளை குறைக்கும். சூர்ய மகாதசா குறைந்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.

இரத்த அழுத்தம்

செம்பு மோதிரம் உங்கள் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

எனவே உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தமோ அல்லது உயர் இரத்த அழுத்தமோ இருந்தால் நீங்கள் செம்பு மோதிரம் அணிவது நல்லது. மேலும் இது உடலில் வீக்கம் ஏற்படுவதை குறைக்கும்.

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் நீங்கள் உடனடியாக செம்பு மோதிரத்தை அணிய வேண்டும்.

செம்பு மோதிரம் அணிவது உங்களை சூரியனால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதுடன் உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

Related posts

தேங்காய் உடைப்பதை வைத்து சகுணம் பார்ப்பது எப்படி?

nathan

வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு

nathan

எடையை ஒரே மாதிரி பராமரிப்பவர்களுக்கான‌ 7 நாட்கள் உணவுமுறை திட்டம்

nathan

சிறப்பான விடியோ ! வெளியேறிய வனிதா கைதட்டி ராஜா மாதா போல லுக்குவிட்டு மாஸ் காட்டியுள்ள ரம்யா கிருஷ்ணன்!

nathan

இத செய்யுங்கள் போதும்..!!தொடை மற்றும் அக்குளில் அசிங்கமாக கறுப்பு அடையாளம் இருக்கா ?

nathan

கூந்தலுக்கு போஷாக்கை கொடுத்து அரிப்புடன் கூடிய பொடுகை நீக்க எளிய இயற்கை வழி முறைகள்!…

sangika

வெளிவந்த தகவல் ! நடிகர் சரத்குமாரை அறிமுகப்படுத்தியது இவர்தான்!

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan