24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
65ryutitiu
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ் என்னென்ன என்று பார்க்கலாம்…பேருதான் சிறு! பலன்கள் பெரு!

இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் இனி நம்முடைய எதிர்காலம்.

அதில் நமக்கு மிகவும் உதவி செய்வது சிறுதானியங்கள். நம் முன்னோர்கள் வயதானாலும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் சிறுதானிய உணவுமுறைக்கு மாறலாம்.

சோளம்

சோளத்தில் உடலுக்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து ஆகிய அனைத்துமே நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடலின் தேவையற்ற எடையைக் குறைக்க உதவும். கரோட்டின் கண்களுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. தயமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சோளத்தில் தோசை, அடை, வடை, வெண்பொங்கல் என
விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

65ryutitiu

தினை

வைட்டமின் பி ஊட்டச்சத்தும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் நிறைந்த இது எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தினையில் இட்லி, தோசை, பொங்கல், அதிரசம், முறுக்கு ஆகையவை
செய்யலாம்.

குதிரைவாலி

இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். மூட்டுவலியைப் போக்கும். குதிரைவாலியில் வெண்பொங்கல், பிரியாணி, உப்புமா போன்றவை செய்து சாப்பிடலாம். நெல் அரிசியைப் போன்றே குதிரைவாலி சாதத்திலும் கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளதால் உடனடியாக எனர்ஜி கிடைக்கும்.

கம்பு

கம்பில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி11 ரிபோஃப்ளேவின், நியாசின் உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துகள் உள்ளன. கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது. இரும்புச்சத்து ரத்தசோகையைப் போக்குகிறது. உடல் வலுவைக் குறைக்கிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது, மலச்சிக்கலை நீக்கி வயிற்றுப்புண்ணை குணமாக்குகிறது. வேறு எந்த சிறுதானியத்திலும் இல்லாத அளவுக்கு கம்பில் ஐந்து சதவீதத்துக்கு மேல் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் பாலிசாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் நிறைவுறா கொழுப்பு உள்ளது. இது இதயத்துக்கு ஏற்றது. தேவையற்ற கொழுப்பை அகற்றி நல்ல கொழுப்பை உடலில் சேர்க்கும். கம்பில் தோசை, பனியாரம், இட்லி செய்து சாப்பிடலாம்.

சாமை

சாமையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, புரதச்சத்து நிறைந்துள்ளது. எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகளை வலிமை பெறச் செய்கிறது. மலச்சிக்கலை நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளை வலுவாக்கும். தாது கெட்டிப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சாமையில் பொங்கல், உப்புமா, பிரியாணி போன்றவை செய்யலாம். சாமை நெல்லரிசி போன்றே பயன்படுத்த ஏற்றது. கைக்குத்தலாக உமி நீக்கி பயன்படுத்தும்போது இதன் நார்ச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

பனிவரகு

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பணியாரம் செய்து சாப்பிடலாம்.

வரகு

வரகில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி, நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டும். கண் நரம்புகளுக்கு ஏற்றது. கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை அளிக்கும். செரிமான மண்டலத்துக்கு ஏற்றது. மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும். நிணநீர் மண்டலத்தை வலுவாக்கும். வரகில் இட்லி, தோசை போன்றவை செய்து
சாப்பிடலாம்.

கேழ்வரகு

இதில் உள்ள டிரிப்டோன் எனும் அமினோ அமிலம் பசிக்கும் உணர்வை நெடுநேரம் தக்கவைத்திருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்படும். இதன் பைட்டோகெமிக்கல்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லவை. லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகின்றன. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடலாம். பால் சுரப்பை மேம்படுத்தும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். கேப்பையில் தோசை வார்த்துச் சாப்பிடலாம்.

Related posts

நீரிழிவு உள்ளவர்கள் கரட், பீற்றுட் உண்ணலாமா? – Dr.சி.சிவன்சுதன்

nathan

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

nathan

சளிக்கு இதமாக இருக்கும் சுக்கு மல்லி காபி

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

உணவு விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்

nathan

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

nathan

இந்த 10 அற்புதமான ஜூஸ்களை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?

nathan

பிஸ்கெட் சாப்பிடுபவரா நீங்க? அப்ப இத படிங்க

nathan