23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
oii
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் வொயிட் டீ-ல் நிறைந்துள்ள நன்மைகள்!!

பதப்படுத்தப்படாத டீ இலைகளை கொண்டு தயாரிக்கப்படும்

டீயைத் தான் நாம் வொயிட் டீ என்கிறோம். இந்த டீயை தயாரிக்க குருத்து இலைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இதனுடைய சுவையே தனியாக தெரியும்.

மற்ற டீக்களை தயாரிப்பது போன்றே இது எளிதானது. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைக்க வேண்டும், பின்னர் அதில் டீ இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவு தான் வொயிட் டீ தயார். வேண்டுமானால் அதில் தேன் கலந்து கொள்ளலாம். சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து அது ஆறிய பிறகு அதில் டீ இலைகளை போடுவார்கள் இது சிறந்த பலனை கொடுக்காது.
oii
டீ இலைகள் அதிக நேரம் இருந்தால் அதன் சாறு தண்ணீரில் இறங்கிவிடும் அப்போது தான் அதன் பலன் கிடைக்கும். ஒரு கப் வொயிட் டீயில் 28 கிராம் காஃபைன் தான் இருக்கிறது. மற்ற பானங்களை ஒப்பிடுகையில் இதன் காஃபைன் அளவு மிகவும் குறைவானது. ஒரு கப் காபியில் 95 கிராம் காஃபைன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புபவர்கள் வொயிட் டீ குடிக்கலாம். இதில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் அவை நம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கச் செய்திடும். அதே நேரத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்திட முடியும்.

வொயிட் டீ குடிப்பது பல்லுக்கும் மிகவும் நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் பற்களில் ஏற்படும் தொற்றை தவிர்க்கவும் அதே நேரத்தில் பற்களை தாக்கும் பாக்டீரியாக்களை அளிக்கவும் செய்திடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த டீ குடிப்பதால் அவர்கள் உடலின் சர்க்கரை அளவினை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் அடிக்கடி தாகமெடுப்பது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வொயிட் டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

விண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். தாம்பத்திய “இன்பத்தின் உச்சக்கட்டம்”

nathan

வேம்பாளம் பட்டை தீமைகள்

nathan

எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. பெண்களுக்கு எந்த வயதில் ஏற்படுகிறது தெரியுமா…?

nathan

“எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’

nathan

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள் – தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

nathan

உங்களுடைய குழந்தைகள் பரீட்சை நல்லா எழுதணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க லிச்சி பழம்!..

nathan

நைட் நேரத்துல இதெல்லாம் பண்ணா உங்களுக்கு தூக்கமே வராது தெரியுமா?

nathan