சிலருக்கு சிறு வயதில் பற்களின் வரிசை நன்றாக தான் இருந்திருக்கும். ஆனால், வளர, வளர பற்கள் முன்னும், பின்னுமாக அல்லது முன் வரிசை பற்கள் மட்டும் தூக்கிக் கொண்டு இருக்கும்.
பற்களின் வரிசை முன்னும் பின்னுமாக சீரில்லாமல் இருந்தால், பற்கள் தூக்கி கொண்டு இருந்தால் க்ளிப் போடவேண்டும் என பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
க்ளிப் மாட்டிய பிறகு சாக்லேட், சூயிங்கம், அல்வா போன்ற மிருதுவான உணவுகள் மற்றும் பற்களில் எளிதாக சிக்கிக் கொள்ளும் உணவுகளை சாப்பிட கூடாது.
உணவுகள் மட்டுமின்றி வேறு விஷயங்களிலும் நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பிரஷ் செய்யும்போது பிரஷ் மென்மையானதாக இறுகக் வேண்டும்.நீங்கள் உணவருந்திய பிறகு கட்டாயம் வாய் கழுவி, கொப்பளிக்க வேண்டும். வாயை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்