இன்று ஏராளமானோர் உடல் பருமனால் கஷ்டப்படுகிறார்கள்.
ஆகவே தங்களது அதிகப்படியான உடல் எடை மற்றும் கொழுப்பைக் கரைப்பதற்கு பல்வேறு உணவுத் திட்டங்களை முயற்சித்து வருகிறார்கள். உடல் எடையைக் குறைக்க பல டயட்டுகள் உள்ளன. அதில் தற்போது பிரபலமாக இருப்பது கீட்டோ டயட். சிலர் வெஜிடேரியன் டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் அனைத்து வகையான டயட்டுகளுமே உடல் எடையைக் கட்டாயம் குறைக்கும் என்று கூற முடியாது. அவற்றில் சில நல்ல பலனைத் தரலாம்.
ஆனால் ஒரு மாதத்தில் குறைந்தது 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் குறித்து கேள்விப்பட்டதுண்டா? ஆம், அது தான் F ஃபேக்டர் டயட் திட்டம். இந்த டயட்டினால் உடல் எடை வேகமாக குறைவதோடு, நீங்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இருக்காது. சொல்லப்போனால் இது மிகவும் எளிமையான ஒரு டயட். இப்போது அந்த டயட் குறித்துக் காண்போம்.
F ஃபேக்டர் டயட் என்பது என்ன?
F ஃபேக்டர் டயட் என்பது ஒரு டயட் அல்ல. ஆனால் இது அதிகப்படியான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் உட்கொள்ளலுடன் தொடர்புடைய ஒரு வாழ்க்கை முறை. இந்த டயட் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உங்கள் பசியையும் பூர்த்தி செய்யக்கூடியவை. இந்த வகை டயட் உடல் எடையைக் குறைப்பதோடு, இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தினால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக F ஃபேக்டர் டயட்டில் ஒரு நாளைக்கு நான்கு வேளை, அதாவது காலை, மதியம், ஸ்நாக்ஸ் மற்றும் இரவு என உணவை உண்ண வேண்டும். அதாவது இந்த டயட்டில் இருப்பவர்கள் 4-5 மணிநேர இடைவெளியில் உணவை உண்ண வேண்டும்.
நன்மைகள்
F ஃபேக்டர் டயட் ஒரு அதிக நார்ச்சத்து டயட் என்பதால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவையாவன:
* கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தது, நல்ல கொலஸ்ட்ரால் மேம்படும்
* இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
* உடலில் ஆற்றல் சீராக இருக்கும்.
நார்ச்சத்து
அமெரிக்க உணவு வழிக்காட்டுதல்களின் படி, பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் நார்ச்சத்து தேவை. அதே சமயம் ஆண்களுக்கு 38 கிராம் நார்ச்சத்து தேவை. F ஃபேக்டர் டயட்டை மேற்கொள்வதன் மூலம், ஒரு நாளைக்கு குறைந்தது 35 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.
கார்டியோ கூடாது
நிபுணர்களின் படி, F ஃபேக்டர் டயட்டை மேற்கொள்பவர்கள், கார்டியோ பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கார்டியோ பயிற்சியை மேற்கொண்டால், அது பசியுணர்வை அதிகரிக்கும். இதன் விளைவாக பசி அதிகரித்து, அதிகளவு கலோரிகளை எடுக்க நேரிடும்.
எடை இழப்புக்கு F ஃபேக்டர் டயட்
உடல் எடையைக் குறைக்க F ஃபேக்டர் டயட்டை மேற்கொள்பவர்கள், மூன்று கட்டங்களைப் பின்பற்ற வேண்டும். இதனால் உடல் எடை வேகமாக குறைவதோடு, தொப்பையும் குறையும். F ஃபேக்டர் டயட்டின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று காண்போம்.
முதல் கட்டம்
F ஃபேக்டர் டயட் திட்டத்தின் முதல் கட்டத்தில், குறைந்தது ஒரு நாளைக்கு 35 கிராம் சுத்தமான கார்போஹைட்ரேட்டுக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
இரண்டாவது கட்டம்
F ஃபேக்டர் டயட் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 75 கிராம் சுத்தமான கார்போஹைட்ரேட்டுக்களை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
மூன்றாம் கட்டம்
F ஃபேக்டர் டயட் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஒரு நாளைக்கு குறைந்தது 125 கிராம் சுத்தமான கார்போஹைட்ரேட்டுக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
F ஃபேக்டர் டயட் திட்டத்தின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்
* F ஃபேக்டர் டயட் திட்டத்தில், அனைத்து வகையான பீன்ஸ்களையும் உட்கொள்ள வேண்டும்.
* அதோடு, முட்டைகள், அதிகப்படியான நார்ச்சத்துள்ள காய்கறிகளான கேரட், பீட்ரூட், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
* மேலும், அதிகளவு நார்ச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் பெர்ரிப் பழங்களையும் உண்ண வேண்டும்.