27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
fgfgf
மருத்துவ குறிப்பு

தகவல் அறுவை சிகிச்சையின் வலி அதிகமாக? அறுவை சிகிச்சையின் வலி இந்தளவுக்குத் தாங்கமுடியாததா?

மனிதகுலத்தைப் படைத்து அளிக்கும் தாய்மையைப் பெற்றவள் பெண்.

இது பெண்ணுக்கு மட்டுமே வாய்த்த தனிச்சிறப்பு. கருவுற்ற காலம் தொடங்கி குழந்தை பிறக்கும்வரை, பிறந்த குழந்தை வளரும்வரை, ஒரு தாய் தன் உடலால், மனதால் செய்யும் தியாகங்கள் இணையற்றவை.

இத்தகைய உன்னதங்களைப் பட்டியலிடும் அதேவேளையில், சில வருத்தமான நிகழ்வுகளையும் நிராகரித்துவிட்டுச் செல்ல முடியவில்லை. 24 வயதேயான ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படவே வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று நாள்கள் கழித்து குழந்தையைத் தாயிடம் சேர்த்திருக்கின்றனர். ஆனால், அறுவை சிகிச்சையின் வலி அதிகமாக இருப்பதாகக் கூறிவந்த அந்தப் பெண், யாரும் எதிர்பாராத வகையில் மருத்துவமனையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இந்த விஷயத்தில் அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி, அந்தப் பெண்ணின் உளவியல் இரண்டையும் ஆராய வேண்டியுள்ளது.

அறுவை சிகிச்சையின் வலி இந்தளவுக்குத் தாங்கமுடியாததா என்று மகப்பேறு மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமாரிடம் கேட்டோம்.

“அறுவை சகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 பிரசவங்களில் 60 பிரசவங்கள் சிசேரியனாகவே நடக்கின்றன. சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியன் பிரசவசமாக இருந்தாலும் இரண்டிலும் வலி இருக்கத்தான் செய்யும்.
fgfgf

சிசேரியன் பிரசவத்தின்போது தாயின் அடிவயிற்றுப்பகுதி குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான அளவுக்குக் கீறப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதனால் அறுவை சிகிச்சை முடிந்த முதல் நாள் சற்று வலி இருக்கவே செய்யும். எனவே, வலி நிவாரணத்துக்கான ஊசி போடப்படும். அடுத்தடுத்த நாள்களில் வலி குறைந்துவிடும் என்பதால் அப்போது மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். சிலருக்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொண்டாலே வலி குறைந்துவிடும். வலி நிவாரண மாத்திரைகளை 3 அல்லது 4-ம் நாள் நிறுத்திவிடுவோம். அதே நாள்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜும் செய்துவிடுவோம். ஆரோக்கியமாகக் குழந்தை பிறந்தால் 99% இதுபோன்ற நடைமுறைதான் பின்பற்றப்படும்.

முன்பெல்லாம், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் போடப்பட்ட தையலை, அந்த இடத்தில் புண் ஆறியதும் மருத்துவமனைக்குச் சென்று நீக்க வேண்டும். தற்போது அந்தப் பிரச்னையும் இல்லை. இன்று போடப்படும் நவீனத் தையல், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு தானாகவே உடலால் கிரகிக்கப்பட்டுவிடும்.
மனநல மருத்துவர் பூர்ணசந்திரிகாகுழந்தை பிறந்து மருத்துவமனையில் இருக்கும் நாள்களிலும், பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போட வரும்போதும் மனநல மருத்துவரிடமும் பிரசவித்த பெண், ஒரு கன்சல்ட்டேஷன் செல்வது நன்று.

அறுவை சிகிச்சை தரும் வலி என்பது, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தாங்கமுடியாதது இல்லை. எனவே, குறிப்பிட்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணுக்கு ஏதாவது உளவியல் பிரச்னைகள் இருந்திருக்கலாம்” என்றார் டாக்டர் காவ்யா கிருஷ்ணகுமார்.

அறுவை சிகிச்சை, ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு உளவியல் சிக்கலை ஏற்படுத்துமா என்று மனநல மருத்துவர்

“சிலர் 10 ஊசிகளைக் கூட ஒரே நேரத்தில் போட்டுக்கொள்வார்கள். சிலர் ஒரு ஊசிக்கே வலி தாங்க மாட்டார்கள். உணர்வு நிலை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலர் தீவிரமான உடல்நலக் குறைவையும் தாங்கிவிடுவார்கள். சிலர் சிறிய பிரச்னையையே தாங்க முடியாமல் இருப்பார்கள்.

பொதுவாக, குழந்தை பிறந்தவுடன் சில பெண்களுக்கு போஸ்ட்பார்ட்டம் புளூஸ் (Postpartum Blues), போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் (Postpartum Depression) ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம். பிரசவத்துக்குப் பிந்தைய ஹார்மோன் மாற்றங்கள், அந்தச் சூழலில் ஏற்படும் தனிமை, பயம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதே போஸ்ட்பார்ட்டம் புளூஸ். பிரசவித்த 10% பெண்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படலாம். இந்தப் பிரச்னை குழந்தை பிறந்த ஒரு வாரம்வரை நீடிக்கலாம். அதற்குப் பிறகு நீங்கிவிடும்.

போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன் இருக்கும் தாய்மார்கள், குழந்தையைத் தனியாக விடுவதற்கு பயப்படுவார்கள், எப்போதும் குழந்தையைத் தன்னிடமே வைத்துக்கொள்வார்கள். சில தாய்மார்களோ இதற்கு நேரெதிராக, குழந்தையிடம் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். தூக்கம் பாதிக்கப்படும், சாப்பிட மாட்டார்கள், தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் பயந்துகொண்டேயிருப்பார்கள். குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் போய்விடும். அப்போது, `நாம் ஏன் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் ஏற்படும். சிலர் குழந்தைக்கும் தீங்கு விளைவித்து தானும் தற்கொலை செய்துகொள்வார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷனுக்கு மனநல சிகிச்சை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும்.

பொதுவாக, பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிந்தைய நாள்களில் குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கப் பெற வேண்டும். அதேபோல, அந்தப் பெண் குடும்பத்தினரிடம் பழகுவதில் ஏதேனும் வேறுபாடுகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் அவரை அழைத்துச் செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்தால் எளிதில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியும்.
Depression

பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் மனநல மருத்துவரும் இருக்க வேண்டும். குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருக்கும் நாள்களிலும், பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போட வரும்போதும் மனநல மருத்துவரிடமும் பிரசவித்த பெண் ஒரு கன்சல்ட்டேஷன் செல்வது நன்று. மருத்துவர்களும் குழந்தை பால் குடிக்கிறதா, அழுகிறதா, தூங்குகிறதா என்று குழந்தையைப் பற்றி மட்டுமே விசாரிக்காமல், தாயிடமும், இரவு தூங்கினாரா, பதற்றம், பயம் என்று ஏதாவது உணர்கிறாரா போன்ற விஷயங்களை விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தாய் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது தெரிய வரும்” என்றார்.

Related posts

வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க சில டிப்ஸ்

nathan

தலை முதல் பாதம் வரை எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து எது தெரியுமா?

nathan

பெண்களின் தாழ்வுநிலைக்கு அவர்களே காரணம்

nathan

நீங்க ஒரு அப்பாவா? அப்போ உங்களுக்காகத்தான் இந்த ரகசியம்!!

nathan

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

nathan

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

nathan

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு

nathan

பெண்களே அந்த 3 நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்…

nathan

உடலில் மொத்த கொழுப்பும் கரைய வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan