25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hjh
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…

முகத்தை அழகாக்க மற்றும் பளபளப்பாக்க வேண்டும் என்று நினைத்தாலே போதும் எல்லா பொருட்களையும் எடுத்து முகத்தில் தடவ ஆரம்பித்து விடுவோம்.

இப்படி எதையும் யோசிக்காமல் நாம் முகத்திற்கு பயன்படுத்தும் நிறைய பொருட்களால் சரும பிரச்சனைகள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. புதுசு புதுசாக விளம்பரத்தை பார்த்து கெமிக்கல்கள் நிறைந்த சோப்புகள், க்ரீம்கள் என்று தாராளமாக பயன்படுத்த தயாராகி விடுகிறோம். இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சில அழகு சாதனப் பொருட்களை நாம் முகத்திற்கு பயன்படுத்தவே கூடாது என்கின்றனர் பியூட்டி எக்ஸ்பட்டுகள். அதையும் மீறி பயன்படுத்தும் போது சரும பிரச்சனைகளான வறண்ட சருமம், பருக்கள், சரும துளைகளில் அடைப்பு, சரும செல்கள் பாதிப்பு மற்றும் அரிப்பு, அழற்சி போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. அதைப் பற்றிய ஒரு அலசல் தான் இந்த கட்டுரை.
hjh
சோப்பு

பொதுவாக நாம் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலே சோப்பை தான் முதலில் பயன்படுத்துவோம். ஆனால் உண்மையில் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது. சோப்பிற்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துங்கள். ஏனெனில் நமது முகசருமம் குறைந்தளவு pH 5.4 – 5.9 அளவு கொண்டுள்ளது. இதுவே சோப்பு என்றால் pH-ன் அளவு 9-10 இருக்கும். எனவே சோப்பை முகத்திற்கு பயன்படுத்தும் போது சரும பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சரும அரிப்பு, எரிச்சல், அழற்சி மற்றும் வறண்ட சருமம் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

பாடி லோசன்

நிறைய பேர்கள் குளிக்கும் அவசரத்தில் பாடி லோசனைக் கூட முகத்திற்கு பயன்படுத்துவது உண்டு. கண்டிப்பாக இந்த மாதிரியெல்லாம் செய்யாதீர்கள். ஏனெனில் பாடி லோசன் கெட்டியான திரவ சோப். இதில் ஏராளமான கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை உங்கள் முகத்தில் அப்ளே செய்யும் போது சரும துளைகள் அடைத்து வேறுபட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே பாடிலோஷனை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிருங்கள்.

சூடான குளியல்

சூடான குளியல் உங்கள் உடம்பிற்கு இதமாக இருக்கும். ஆனால் அது உங்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் நீங்கள் சூடான நீரைக் கொண்டு முகம் கழுவும் போது முகத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து சரும துளைகள் அடைபடக்கூடும் இதனால் பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சூடான நீரைக் கொண்டு முகத்தை கழுவாதீர்கள்.
jhjgh

ஷாம்பு

ஷாம்பானது நமது தலையில் உள்ள அழுக்குகளை வெளியே கொண்டு வந்து நீக்கும் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் இது உங்கள் முக சருமத்திற்கு உகந்தது அல்ல. முகத்திற்கு ஷாமுபை பயன்படுத்தும் போது சருமத்தில் வறட்சி, தோல் உரிதல், திட்டுகள் போன்றவை தோன்றக் கூடும். எனவே தலைக்கு தேய்க்கும் ஷாம்பை கொண்டு முகத்தை சுத்தம் செய்யாதீர்கள்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

தலைக்கு அடிக்கும் பல டைகளில் இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுகிறது. இது உங்கள் சருமத்திற்கு உகந்தது அல்ல. இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு உங்கள் முகத்தில் படும் போது சரும செல்கள் உருவாக்கத்தை தடுத்து பாதிப்படைந்த சருமம் சரியாகுவது தடைபடுகிறது. எனவே டை அடிக்கும் போது கூட ஹைட்ரஜன் பெராக்ஸைடு முகத்தில் படாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

டூத் பேஸ்ட்

பருக்கள் மீது டூத்பேஸ்ட் தடவினால் சரியாகி விடும், சரும பாதிப்பிற்கு டூத்பேஸ்ட் சிறந்தது இது போன்ற விஷயங்களை நம்பி மக்கள் இதை செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் டூத்பேஸ்ட்டில் கலந்துள்ள நிறைய கெமிக்கல்கள் சரும எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். எனவே எக்காரணம் கொண்டும் டூத்பேஸ்ட்டை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள்.

மேற்கண்ட பொருட்களை நீங்கள் முகத்திற்கு அப்ளே செய்வதை தவிர்த்து ஆரோக்கியமான அழகை பேணுங்கள்.

Related posts

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தாய்ப்பால் சுரக்கின்றது தெரியுமா?

nathan

இவ்வாறான பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம்……

sangika

உங்கள் கழுத்தை அழகாக பேணிப் பராமரிக்க

nathan

நடிகை சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படங்கள்.. தனிமையில் எல்லைமீறிய போஸ்!

nathan

மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்-திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika