ஒரு நாள் முழுக்க நாம் எவ்வாறு வேலை செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிப்பது நாம் வெறும் வயிற்றில் அருந்தும் ஆகாரம் மட்டுமே. அது எந்தெந்த ஆகாரத்தை சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என பார்க்கலாமா.
காலை எழுந்ததும் அரை மணி நேரத்திற்குள் குறைந்தது முக்கால் லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு முறையில் குடிக்க முடியாதவர்கள், அரை மணி நேரத்திற்குள் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு குடிக்கலாம்.
காலையில் வெந்நீரை விட குளிர்ந்த நீர் ( குளிர்சாதன பெட்டியில் வைத்த நீர் அல்ல) குடிப்பது மிகுந்த நல்லது.
காரணம், குளிர்ந்த நீரானது நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை எளிதாக சமன் செய்துவிடும்.
வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. மேலும் வெந்தயத்துடன் மோர் குடிக்க கூடாது. காரணம், வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது. மோரும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆதலால் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், எளிதில் சளி பிடித்துக்கொள்ளும். மேலும், வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் தான் சாப்பிட வேண்டும். காலையில் அப்படியே சாப்பிட்டால் அது செரிமானம் ஆக சிரமப்பட்டு வயிற்று போக்கை ஏற்படுத்திவிடும்.
இஞ்சியை தொலியை எடுத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடலில் உள்ள கொழுப்பு குறையும், நுரையீரல் பிரச்சனை வரமால் தடுக்கப்படும். ஆனால், வாய்ப்புண், வயிற்று புண் இருப்பவர்கள் இதனை சாப்பிட கூடாது.
அல்சர் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு மிக சிறந்தது. ஆனால் கடைகளில் விற்கப்படும் அருகம்புல் சாறு பொடி வாங்கி சாப்பிட கூடாது, ஏனென்றால், அருகம்புல்லில் இருக்கும் தண்டு மட்டுமே மருத்துவகுணம் கொண்டது. அதனால் அதனை மட்டும் அரைத்து சாப்பிட்டால் நல்லது. வீட்டில் அருகம்புல் செடிவைத்திருத்தல் மிகுந்த நல்லது.
காலையில் நீர் ஆகாரம் அருந்துவதால் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் கிடைக்கும். அதனுடே மோர் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும். காலையில் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.