27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
cvcvc
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் நெஞ்சில் ஏற்படும் சளியை முற்றிலும் நீக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள்…!

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை.

மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விடமுடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
cvcvc
நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது.

எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

இதோ எளிய நிவாரணம்! இடுப்பு வலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!

nathan

ஒருவர் நாக்கு அல்சர் நோயினால் பாதிக்கப்படுகையில், சூடான அல்லது காரமான உணவுகள் வலியை தூண்டலாம் என்பதால் இது போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

nathan

குடிப்பழக்கத்தை விட்டவுடன் இதெல்லாம் நடக்கும் நம்புங்க!!

nathan

சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan

தமிழ் மொழி எப்படி பிறந்தது என்று தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உயர் இரத்த அழுத்தம் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க நினைத்தால் இதனை அடிக்கடி எடுத்துக்கோங்க…!!!

nathan

அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் எவ்வளவு மருத்துவபலன்கள் தெரியுமா?

nathan