29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
tuyu
ஆரோக்கியம் குறிப்புகள்

காய்ச்சல் பற்றி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்..அச்சம் வேண்டாம்…அலட்சியமும் வேண்டாம்…

‘காய்ச்சல்னா 2, 3 நாள் இருக்கும். அப்புறம் சரியாகிடும்… கஷாயம் வச்சு குடி… இல்லன்னா டாக்டரை பாரு…’

– இதுதான் இத்தனை வருடங்களாக நாம் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் வந்தது. ஆனால், சமீப வருடங்களாக காய்ச்சல் என்பது உயிர்க்கொல்லியாக மாறி நம்மை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது. மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என்று பலவிதமான பெயர்களில் பாரபட்சமில்லாமல் பாடுபடுத்துகிறது.

பருவமழையின் காலம், பனி வரும் காலம் என அடுத்தடுத்து வர இருக்கும் மாதங்கள் காய்ச்சலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் காய்ச்சல் பற்றி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருந்தால் கவலையும் வேண்டியதில்லை என்கிறார் பொதுநல மருத்துவரான தேவராஜன்.

”அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காற்று, மழை, பனி எனத் தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவை பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
tuyu
இந்த நோய்களைக் கடுமையான ஜுரம், மூட்டு இணைப்புகளில் தாங்க முடியாத வலி, ரத்தத்தில் தட்டணுக்கள் குறைதல், உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுக்கள்(Red Patches)காணப்படல் போன்ற அறிகுறிகளை வைத்து, இவற்றைத் தனித்தனியே அடையாளம் காணலாம். இதற்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

எந்தக் காரணத்திற்காகவும் டாக்டர் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் தாங்களாகவே மருந்து, மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தக் கூடாது. டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், கூடிய விரைவில் வந்துவிடும்.

இத்தகைய காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்கள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் 90 சதவிகிதம் முழுமையாக குணப்படுத்த முடியும். 8 சதவீதத்தினரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை காணப்படும். மீதமுள்ள 2 சதவீதத்தினர்தான் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

இந்த நோய்களால் உடலில் நீர்சத்து கணிசமாக குறையும். எனவே, நீர் ஆகாரங்களை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில், அளவுக்கு அதிகமாக ஐஸ் சேர்த்த குளிர்பானங்கள், ஜூஸ், மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அதற்குப் பதிலாக, மோர், இளநீர் அருந்தலாம். காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ப்ளட் கவுண்ட்ஸ்ஸைப் பரிசோதிப்பது அவசியம். இந்த நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள காய்கறிகள், பழங்கள் போன்ற சத்தான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

இதனால், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக்கொள்வது அவசியம். குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது உடலை முழுவதும் மூடும்படி ஆடை உடுத்த வேண்டும்.

கொசு கடிக்காமல் இருக்க, லோஷன் உபயோகிக்கலாம். இந்த சீசனில் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆரம்ப நிலையில் சாதாரண ஜுரம் போன்ற அறிகுறிகளுடந்தான் தென்படும். எனவே, பெரும்பாலானோர் டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல், ‘ஓவர் த கவுன்ட்டர் ‘முறையில், தாங்களாகவே மாத்திரைகள் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்; அவ்வாறு செய்வது மிகவும் தவறான, ஆபத்தான செயல். ஆகவே, ஓவர் த கவுன்ட்டர் முறையைத் தவிர்ப்பது நல்லது’ என்கிறார்.
tyutyu
காய்ச்சல் வந்தால் கடைபிடிக்க வேண்டியவை

* காய்ச்சல் வந்தால் சுய வைத்தியம் செய்யக் கூடாது. அருகில் உள்ள பொது மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன வகையான காய்ச்சல் என்பதை அறிந்து, அதற்கேற்ற மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சையை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

* வருடத்துக்கு ஒருமுறை இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது ஃப்ளூ காய்ச்சலில் இருந்து காப்பாற்றும். குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலைத் தடுப்பதற்கான நியூமோகோக்கல் தடுப்பூசி போட வேண்டும்.

* செயற்கை ரசாயனங்கள் கலந்த கொசுவத்தி, கொசுவத்தி திரவம் போன்றவற்றைத் தவிர்த்து முடிந்தவரை மாலை நான்கு மணிக்கெல்லாம் ஜன்னல்களைப் பூட்டி, கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதே சிறந்த வழி.

* காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களைத் தவிர அனைவரும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம். காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகுதான் இதை செய்ய வேண்டும்.

* மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும் என்பதால் காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். பழங்களை பகல் வேளையில் சாப்பிட வேண்டும்.

* கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்பு, கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.

* மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம். மழைக்காலத்தில் அதிகமாக காபி, டீ குடிக்கத் தோன்றும். ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்தக் கூடாது. மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்காது. அதனால் தண்ணீர் அருந்தாமலேயே இருக்கக் கூடாது.

சூப், ரசம், பால், டீ, காபி எனத் திரவ உணவுகள் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டில் கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரை எடுத்துச் சென்று குடிக்க வேண்டும்.

காய்ச்சல் வர காரணம் என்ன?!

குளிர்காலங்களில் கிருமிகள் பரவுவதற்கு ஏற்ற ஈரப்பதமான சூழல் நிலவுவதே இதற்கான அடிப்படைக் காரணம். உடல் நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. அலுப்பு, அமைதியின்மை, வலி, பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடுவது போன்றவை காய்ச்சலின் அறிகுறிகள்.

ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஒவ்வொரு நபருக்கும், நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால், உடல் வெப்பநிலை 100.5°F அல்லது அதற்கு மேலே சென்றால் அதைக் காய்ச்சல் அல்லது ஜுரம் என்று சொல்கிறோம். என்ன காய்ச்சல்? எதனால் ஏற்பட்டுள்ளது? அதன் தன்மைகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? என்பதை தெரிந்து கொண்டோமானால் காய்ச்சலும் கடந்து போகும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உலர்ந்த அல்லது குளிர்ந்த காற்றை தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! வயிற்று எரிச்சலை போக்க சில ஈஸி டிப்ஸ்!

nathan

ஒரு தேங்காய் போதும்… பூமிக்கடியில் தண்ணீர் எங்க அதிகம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே உஷார்!பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்னு தெரியுமா?

nathan

Health-ஐக் கொண்டு Wealth-ஐப் பெருக்க… 6 அற்புத வழிகள்!

nathan

தலை சீவும் போது யோசிக்க வேண்டியவை

nathan

இந்த பழக்கம் உள்ள பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாம்…

nathan

உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா பூமிக்கு மேல் விளையும் தொன்மையான காவளிக்கிழங்கு!

nathan

இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்…! நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

nathan