23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
yuyu 3
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்குதான் இந்த விஷயம் அதிகமாக கோபம் வருகிறதா.?

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.

உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் :
yuyu 3
1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும். 6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

Related posts

நீங்க இந்த பானம் குடிப்பதால் உங்க குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்…!

nathan

இதோ எளிய நிவாரணம்! வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவும் உணவுப் பொருட்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை சாப்பிட வைப்பதே தனிக்கலைதான்

nathan

சூப்பர் டிப்ஸ் !தாய்ப்பால் குறைவா? காலடியில் கிடக்குது பாலாடை…

nathan

நீங்கள் கவனிக்க வேண்டிய 4 அறிகுறிகள்! உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வருகிறதா?

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் செய்யவேண்டியவை…

nathan

எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை வாங்காதீங்க… தெரிந்துகொள்வோமா?

nathan

தூக்கத்தில் கஞ்சத்தனமா? காத்திருக்கும் ஆபத்து

nathan