29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
jkhbjg
ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் பெற்றோர்களுக்கு அலர்ட் `பெண் குழந்தை விரைவில் பூப்பெய்த ஐஸ்க்ரீமும் ஒரு காரணம்!”

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

ஐஸ்க்ரீம்

ஆனால், எல்லோருடைய உடலுக்கும் எல்லா நேரமும் ஏற்றுக்கொள்ளும் ஹெல்தி உணவுப்பொருளாக ஐஸ்க்ரீம் இருக்காது.

நமக்கு ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிந்தும்கூட, அதை மீண்டும் மீண்டும் உட்கொள்பவர்கள் ஏராளம். `என்ன செய்றது, ஐஸ்க்ரீமைப் பார்த்துட்டா எனக்கு டெம்ப்ட் ஆகிடுதே’ எனச் சொல்பவர்கள் நம்மில் பலர்.

`யார், எப்போது, எவ்வளவு ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்?’ – விரிவாகச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ராஜேஷ்வரி.
jkhbjg

ஊட்டச்சத்து நன்மைகள்

“யார், எவ்வளவு என்பதைப் பார்க்கும் முன், ஐஸ்க்ரீமில் என்னென்ன சத்துகள் உள்ளன, உண்பதற்கான அளவுகோல் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஐஸ்க்ரீம்

50 மி.லி ஐஸ்க்ரீமில் 140 முதல் 200 கலோரி, 50 % கார்போஹைட்ரேட், 2% புரதம், 7 முதல் 13 கிராம் முழு கொழுப்பு, 30 முதல் 70 கிராம் கொலஸ்ட்ரால், 14 முதல் 19 கிராம் சர்க்கரைச்சத்து போன்றவை இருக்கும். சில ஐஸ்க்ரீம்களில் ஒரு சில வைட்டமின் சத்துகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். உடன் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துகளும் நிறைந்திருக்கும்.
ghgh 1
யார், எவ்வளவு..?

எந்தவித உடல்நலப் பிரச்னையுமில்லாத இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரே ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.
ஐஸ்க்ரீம்

முழு கொழுப்புச்சத்து நிறைந்த பால்தான் (Whole Fat Milk) ஐஸ்க்ரீம் தயாரிப்புக்கு அடிப்படை. இந்தக் கொழுப்புச்சத்து இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் வயது முதிர்ந்தவர்கள், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள், இதயப் பிரச்னை உள்ளவர்கள் ஐஸ்க்ரீமை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

புரதம் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் குழந்தைகள் வாரம் ஒரிருமுறை உட்கொள்ளலாம். சிலர் ஃப்ளேவர்டு ஐஸ்க்ரீம்களை மிகவும் விரும்பி, தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உண்டு. அளவுக்கு மீறி இதைச் சாப்பிடும்போது, அதில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
ஐஸ்க்ரீம்
gfhgh
ஐஸ்க்ரீமிலுள்ள முழு கொழுப்புச்சத்தால், அவர்களின் உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இப்படியான மாற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் பெண் குழந்தைகள், விரைவில் பூப்பெய்துவிடும் சூழல்கூட ஏற்படலாம். ஐஸ்க்ரீம் என்றில்லை, முழு கொழுப்புச்சத்து நிறைந்த எந்த உணவையும் குழந்தைகளுக்குத் தருவதை, முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.

ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடன்…

ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கு முன் உடல், அறை வெப்பநிலையில் இருந்திருக்கும். ஐஸ்க்ரீமை உட்கொள்ளும்போது, உடல் சட்டென, குளிர்ந்த நிலைக்குச் செல்லும். இது, உடலின் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதைச் சமன்செய்ய, அறை வெப்பநிலையிலுள்ள தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்னர் தண்ணீர் குடிப்பதால் பயனில்லை.
ஐஸ்க்ரீம்

டெசர்ட் வகைகளில் முக்கியமானது என்பதால், பார்ட்டி அதிகம் செல்பவர்கள் ஐஸ்க்ரீம் கட்டாயம் சாப்பிட்டுவிடுவர். இப்படியான பார்ட்டிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் இருக்குமென்பதால் `சாப்பிட்டே ஆகணுமா’ என்ற யோசனை எழலாம்.
`இந்த நேரத்தில் சாப்பிடுவது ஓகே, அந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது’ போன்ற வரைமுறைகளெல்லாம் ஐஸ்க்ரீமுக்கு கிடையாது. காலையோ இரவோ பிடித்திருந்தால் சாப்பிடலாம். ஆனால், சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கட்டாயம்!

ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் சளித்தொந்தரவு சரியாகுமா?

இந்தக் கருத்தின் அடிப்படையே தவறு. சராசரி வெப்பநிலையில் உடல் இருக்கும்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலே உடல் தடுமாறும். அப்படியிருக்கும்போது, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் பிரச்னை அதிகரிக்குமே அன்றி நிச்சயமாகக் குறையாது. சைனஸ் தொந்தரவு, மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடவே கூடாது.
ஐஸ்க்ரீம்

பருவ மாற்றமும் ஐஸ்க்ரீமும்!

மழைக்காலத்தில் நீர் வழி நோய்கள் அதிகம் பரவும். உடலின் வெப்பநிலையும் சமனில் இருக்காது. தொற்றுநோய்களின் தாக்கமும் அதிகம் இருக்கும். ஆகவே மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், அடிக்கடி சளி இருமல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் முற்றிலுமாக இதைத் தவிர்க்க வேண்டும்.
ஐஸ்க்ரீம்

வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் தடையேதும் இல்லை. `அளவோடு சாப்பிட வேண்டும்’ என்பதை மனதில் நிறுத்திக்கொண்டால் போதும்” என்கிறார் ராஜேஷ்வரி.

Related posts

கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க..

nathan

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

nathan

ரகசியம் என்ன தெரியுமா? உங்கள் கால் விரல்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி கூறும்

nathan

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு..

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது…?

nathan

பெண்களே ஆண்களுடன் பழகும் போது…இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்…!

nathan

இது எளிமையான வழி.! சூப்பர் டிப்ஸ் உடல் எடையை குறைக்க.,

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தையை இரகசியமாக கண்காணிப்பாதல் எத்தனை தீமைகள் உண்டாகும் என தெரியுமா?

nathan