25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
yuyg
ஆரோக்கிய உணவு

கட்டாயம் இதை படியுங்கள் டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்!

கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். இதன் மருத்துவரீதியான பலன்களையும், ஊட்டச்சத்து விபரங்களையும் பற்றி உணவியல் நிபுணர் சிவப்ரியா இங்கே விவரிக்கிறார்…

* டர்னிப்பின் தாவரவியல் பெயர் ப்ராசிகா ரப்பா(Brassica rapa). Brassicaceae என்கிற கடுகு குடும்பத்தைச் சேர்ந்தது என்று வகைப்படுத்துகிறார்கள்தாவரவியலாளர்கள்.

* டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆசியா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் டர்னிப்பின் இலைகளும் உண்ணப்படுகின்றன. * டர்னிப்பில் வெள்ளை, பர்பிள், சிவப்பு, பேபி, ஸ்னோ பால், கோல்டன் என ஆறு வகைகள் உள்ளது. இவை அனைத்தும் சூப்கள், கூட்டு வகைகள், கறி வகைகள், சாலட் என பல வகைகளில் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

* டர்னிப்பில் வைட்டமின்கள் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன.

* வைட்டமின் இ மற்றும் கே ஆகியவற்றையும் இக்காய் அதிகம் கொண்டுள்ளது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது
உப்புக்கள் காணப்படுகின்றன.

* டர்னிப்பில் உள்ள நார்ச்சத்தானது இதயத்தில் உள்ள அதிகப்படியாக உள்ள கொலஸ்ட்ராலை கழிவாக வெளியேற்றிவிடும் திறன் கொண்டது. எனவே டர்னிப்பினை உண்டு இதய நலத்தைப் பேணலாம்.

டர்னிப் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய் ஆகும். இதனால் ஆண்டு முழுவதுமே உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய காயாக டர்னிப் இருக்கிறது. இதன் மூலம் ஆயுள் முழுவதுக்குமான உடல்நலனைப் பேண முடியும்.
yuyg
* டர்னிப்பில் வைட்டமின் சி-யானது அதிகளவு காணப்படுகிறது. இந்த வைட்டமின் சி நோய் தடுப்பாற்றலை வழங்கும் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை பெருகச் செய்கிறது. மேலும் சாதாரண சளி, இருமல் முதல்நாள்பட்ட நோய்களான புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றையும் தடுக்க இந்த நோய் தடுப்பாற்றல் உதவுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு அவசியமான இரும்புச்சத்தினை அதிகம் டர்னிப் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியாவைத் தடுக்கிறது. எனவே இரும்புச்சத்தினை அதிகம் கொண்டுள்ள டர்னிப்பினை உண்டு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தைப்
பெறலாம்.

* டர்னிப்பில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* டர்னிப் அதிகளவு கால்சியம் மற்றும் மாங்கனீசைக் கொண்டுள்ளது. இவை உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமை அளிப்பதோடு அவை வளர்வதற்கும்
உதவுகின்றன.
gyu
* வைட்டமின்சி ஈ, மாங்கனிசு, பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடெண்டுகள் டர்னிப்பில் அதிகம் காணப்படுகின்றன. இவை செல்கள் உருவாக்கத்தின்போது ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களின் செயல்பாட்டிலிருந்து உடலினை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* டர்னிப் காய்களையும், கீரைகளையும் கால்நடைகளுக்கும் தீவனமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.

* டர்னிப்பில் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டினைத் தடுக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. எனவே, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம். இதேபோல் டர்னிப் கீரை மற்றும் கிழங்கில் குறிப்பிட்ட அளவு ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. இதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்பாதையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுநீரக கற்கள் பிரச்சினையினால் அவதிப்படுவோரும் டர்னிப்பினைத் தவிர்ப்பது நலம்.

* டர்னிப் கிழங்கினை வாங்கும்போது புதிதாகவும், விறைப்பாகவும், அளவில் சிறியதாகவும், கையில் தூக்கும்போது கனமானதாகவும் இருக்குமாறு வாங்க வேண்டும்.

உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் ஏற்பட்டு வருவதால், மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் அதிக அளவில் பரவிவருகிறது. எனவே, இத்தனை நலன்களை உள்ளடக்கி இருக்கும் டர்னிப்பினையும் நாமே விளைவித்து, செயற்கை பூச்சிகொல்லிகளால் நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நோய்களிலிருந்து தப்பித்து நலமாக வாழலாம்!

Related posts

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்!

nathan

கரிசலாங்கண்ணி பொடி சாப்பிடும் முறை

nathan

உங்களுக்கு தெரியுமா பிரீசரில் இந்த பொருட்களை எல்லாம் வைத்த உடலுக்கு பேராபத்தையே ஏற்படுத்துமாம்?..

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா?

nathan

அடுப்பில்லை, எண்ணெயில்லை… ஆரோக்யத்துக்கு அடித்தளமிடும் இயற்கை சமையல் முறை!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா இவ்வளவு நன்மை இருக்கா..?

nathan

பெண்களே தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சலரோகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க!….

sangika