36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இதோ அற்புதமான எளிய தீர்வு சரும பிரச்சனைகளை தடுக்க தினமும் கற்றாழை ஜெல்!

கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளில் கிடைக்கும் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

தேன், மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.

வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பிம்பிள் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்

வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.

தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்.

Related posts

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்! ~ பெட்டகம்

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்ப்பட்டால் பின் விளைவுகள் அதிகம்.

sangika

இதை நீங்களே பாருங்க.! பார்ட்டியில் அஜால் குஜாலாக ஆட்டம் போட்ட தனுஷ், ஜெயம் ரவி, திரிஷா

nathan

வெளிவந்த தகவல் ! பிரபல இயக்குநர் நடிக்கும் முதல் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!..

nathan

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan