குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! இந்த மரத்து இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பது தொடர்பான தடைகள் நீங்கி கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாகும்.
இந்த மரத்தின் இலையை நறுக்கி, அதோடு வெங்காயம், தேங்காய் மற்றும் நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிட்டு வந்தால், நன்றாகத் தாய்ப்பால் சுரக்கும். இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால், சொறி, சிரங்கு குணமாகும்.
சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க, வாந்தி வாயிலாகவும், காலைக்கடன் கழிக்கும்போதும் கிருமி, சளி வெளியேறிவிடும்.இந்த இலைச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், உடல் பருமனும் குறையும். இதனுடைய பட்டை பாம்புக் கடிக்கு நல்ல மருந்து!” என கல்யாண முருங்கையின் மகத்துவங்களை விவரித்தார்.தோட்டத்துக்கு மட்டும் அல்ல… மக்களின் வாட்டம் நீக்கவும் கைகொடுக்கும் மகத்தான மரம் கல்யாண முருங்கை!