32.5 C
Chennai
Tuesday, Jul 15, 2025
3404351438dd12cd5531dd66bf0064e21e6522b5 1735761080
ஆரோக்கிய உணவு

வாங்க தெரிஞ்சுக்கலாம்..!பெண்களுக்கான சில சமையல் டிப்ஸ்…

இன்றைய காலத்தில் பெண்களுக்கு பல வேலைகள் இருக்கிறது. அதனால் பலருக்கு சமைக்கும் திறன் ஓரளவுக்கு தான் உள்ளது.

இந்த துரிதமான வாழ்க்கையில் உணவிற்கு நாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் நாம் அவசரமாக சமைக்கும் உணவுகள் ருசியாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறதா? என்றுக் கேட்டால் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் இன்று நாம் அசத்தலான சமையல் செய்வதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்ப்போம்.

3404351438dd12cd5531dd66bf0064e21e6522b5 1735761080

நீங்கள் சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

சேமியா பாயசம் செய்யும்போது, அவை குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கலாம்.

கேழ்வரகை ஊற வைத்து, பிறகு அவற்றை அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சிறிதளவு சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்கக்கூடாது. ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் குறைந்துவிடும். மேலும் அதில் உள்ள மனமும் போய்விடும்.

ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் எதுவும் வராது.

அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கனமில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.

பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால் அவை சரியாகிவிடும்.

Related posts

சர்க்கரை நோய் மற்றும் பெண் மலட்டு தன்மையை போக்கும் நாவல் பழம்

nathan

சுவையான கேரட் சட்னி

nathan

கேரட் துவையல்- 10 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?

nathan

எலுமிச்சை ஜூஸில் பப்பாளி விதையை கலந்து குடித்தால் இந்த நோய்கள் எல்லாம் குணமாகும்.சூப்பர் டிப்ஸ்..

nathan

தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்.. பார்லி தண்ணீர் குடியுங்கள்!

nathan

water apple in tamil – வாட்டர் ஆப்பிள் பழம்

nathan

அறிந்து கொள்ள..உடலில் ரத்தம் அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா….?

nathan