25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
teeth4
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

கவலையை விடுங்கள் மிக எளிய இயற்கை முறையில் பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க முடியும். முள்ளை முள்ளால் எடுப்பது போல, மஞ்சள் கறையை மஞ்சளை கொண்டே போக்க முடியும்.

தேவையான பொருள்

கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை தேர்வு செய்யாமல், இயற்கையான மஞ்சளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இயற்கை மஞ்சளில் தான் செயற்கை இரசாயன கலப்பு இருக்காது.

பயன்பாட்டு முறை

உங்கள் டூத் பிரஷை ஈரப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான அரை கால் பங்கு (1/8) மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள்.

3 – 5 நிமிடங்கள்

உடனே வாய் கழுவிவிட கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்கும் படி பேசாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் பல் துலக்குங்கள்

5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கொப்பளித்து கழுவி கொள்ளவும். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசம் போவதற்கு உதவும்.

ஒரு வாரம் தொடர்ந்து ஒரு வாரம் இதை பின்பற்றி வந்தால்

பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே மாற்றத்தை உணர முடியும்.teeth4

மஞ்சள் டூத் பேஸ்ட்

தேவையான பொருட்கள் 1/4 டீஸ்பூன் இயற்கை மஞ்சள் பொடி -1/8 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

மஞ்சள் டூத் பேஸ்ட் செய்முறை

மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்யை பேஸ்ட் போன்று குழைத்து கொள்ளுங்கள். வெறுமென தண்ணீர் கலந்து பயன்படுத்துவதை விட இது இன்னும் சிறந்த பயனளிக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், தேங்காய் எண்ணெயும் சிறந்த இயற்கை சுத்திகரிப்பு மூலப்பொருள் ஆகும்.
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வந்தாலும் கூட வாய் துர்நாற்றம், பற்களில் மஞ்சள் கறை போன்றவற்றில் இருந்து சீரிய முறையில் தீர்வுக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்த ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

இதயநோய் பாதிப்பு

nathan

கர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்

nathan

ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கும் சிறந்த உணவுப்பொருட்கள்

nathan

பதறவைக்கும் இதய நோய்! – ஏன் வருகிறது… என்ன தீர்வு?

nathan

தேமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மாரடைப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் கண்டிப்பாக கூடவே வைத்திருக்க வேண்டியவை!

nathan

அஜீரணத்தை எளிதில் குணப்படுத்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan