25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
best sleep
ஆரோக்கியம் குறிப்புகள்

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கலாம் தெரியுமா? கட்டாயம் இதை படியுங்கள்…

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகமிக அவசியமான ஒன்று. இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால் அந்த நாள் முழுவதும் அலுப்பாக ஒருக்கும். வேலையில் மனம் ஒட்டாது. தூக்கம் மனிதர்கர்களும் ஆயுளை நீட்டிக்கிறது. மன மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் வலி நிவாரணியாக செயல்படுகிறது.

நிம்மதியான தூக்கம் தடைபட பல காரணங்கள் உள்ளன.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.

தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை)

புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை)

தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.best sleep

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை)

தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை)

தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை)

ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை)

பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை)

தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

Related posts

கட்டாயம் இதை படியுங்கள் பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!

nathan

ஆயுர்வேத இரகசியம்! தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு உண்டா ??

nathan

வாரத்தில் மூன்று நாள் இந்த கீரையை தவறாமல் சாப்பிடுங்க!

nathan

இந்த ஆறு பயிற்சியை வீட்டில் செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் கட்டாயம் இதை திருமணத்திற்கு பின் சாப்பிட வேண்டும்.. முக்கியமான உணவுகள்..!

nathan

போதிய தண்ணீர் குடிக்காமை எற்படுத்தும் பாதிப்புக்கள் அளப்பரியது!….

sangika

ஏழே நாளில் இதுவரை உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்க செய்ய வேண்டியவைகள்!

nathan

இவ்வளவு அற்புத சக்தியா.. இனி எலுமிச்சம் பழத்தோலை தூக்கி போடாதீங்க..

nathan